நடிகர் தனுஷ் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ்தான். அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய சில படங்களுக்கும் இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ்தான். பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த பெருமை இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ்க்கு உண்டு. வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
பொல்லாதவன், காளை, ஆயிரத்தில் ஒருவன், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டணம், ஆடுகளம், எவனோ ஒருவன், குசேலன், சகுனி, தாண்டவம், மயக்கம் என்ன, தெய்வத் திருமகள், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், சூரரைப் போற்று என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ்குமார்தான். இந்த படங்களில் இடம்பெற்ற பல பாடல்கள் இன்றும் டிரண்டிங் பாடல்களாக இருக்கின்றன.
நிறைய படங்களில் ஹிட் படங்களை கொடுத்து இசையமைப்பாளராக அசத்திய ஜீவி பிரகாஷ்குமார், ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறினார். பல படங்களில் நடித்துள்ளார். மொத்தம் 24 படங்கள் வரை ஜீவி பிரகாஷ்குமார் நடித்துள்ளார். இதில் சிவப்பு மஞ்சள் பச்சை, செம, ஜெயில், நாச்சியார், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, அடியே, பேச்சுலர், டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இந்நிலையில் நடிகர் தனுஷின் மிக முக்கியமான படங்களான ஆடுகளம், பொல்லாதவன், மயக்கம் என்ன போன்ற படங்களுக்கும் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கும் இசையமைத்த வகையில் தனுஷூடன் மிக நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார், இரண்டு நண்பர்களுக்குள் சண்டை, மோதல் வருவது எல்லாம் சகஜம்தான். அதுபோல் தனுஷூக்கும் எனக்கும் சண்டை ஏற்பட்டது. அதனால் நாங்கள் 6 ஆண்டுகளாக பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
தனுஷ், தனக்கு திருமணம் ஆவதற்கு முன்பு வரை ஜீவி பிரகாஷூடன் மிக நெருக்கமாக பழகியவர். பிறகு ஐஸ்வர்யரா ரஜினிகாந்தை திருமணம் செய்த பிறகு, இசையமைப்பாளர் அனிருத்துக்கு சிபாரிசு செய்தார். ஏனெனில் அவர் ஐஸ்வர்யாவின் உறவினர். அதனால் ஜீவி பிரகாஷ் இசையமைக்க வேண்டிய பல படங்கள், கடைசி நேரத்தில் தனுஷால் பறி போனது. அந்த படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். அந்த வகையில்தான் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆனால் வளர்ந்த பின் அனிருத், தனுஷை கண்டுகொள்ளவில்லை. பின் மீண்டும் வெற்றிமாறன் மூலம் தூது பேசி, தன் நண்பர் ஜீவி பிரகாஷூடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





