நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி உடன் நிறைவடைந்து அன்றைய தினமே படக் குழு சென்னைக்கு திரும்புகிறது.
நடிகர் விஜய் துவக்கத்தில், இளைய தளபதி என அழைக்கப்பட்டார். பிறகு தளபதி விஜய் என்று அவரது பெயர் மாற்றப்பட்டது. இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கிறார். இப்போது நடித்து வரும் கோட் படம், அதைத் தொடர்ந்து விஜயின் 69வது படம் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவிட்டு, அடுத்து அரசியலில் முழுமையான கவனம் செலுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
விஜயின் 69வது படத்தை அவரது பினாமிகளாக உள்ள எஸ் எஸ் லலித்குமார் (செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ) மற்றும் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் ஆகியோர்தான் தயாரிக்க உள்ளனர். அதாவது விஜயின் சொந்த தயாரிப்பு படமாக விஜயின் 69வது படம் உருவாகிறது.
இந்த படத்தை டைரக்ட் செய்பவர் எச் வினோத். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு போன்ற வெற்றி படங்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உருவாகி வரும் கோட் படத்தில் அரசியல் இல்லாத நிலையில், விஜயின் 69வது படத்தில் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே இருக்கும். அரசியல் கதைக்களத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு, நடிகர் அஜித் குமார் தான் போட்டி என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிற நிலையில், உண்மையில் விஜய் செய்வதை எல்லாம் போட்டியாக செய்து கொண்டிருக்கும் நடிகர் யார் என்றால் அவர் நடிகர் விஷால் தான். அவர் தளபதி என பெயர் வைத்துக் கொண்டால், இவர் புரட்சித் தளபதி என பெயர் வைத்துக் கொண்டார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் இவர் தனது அமைப்பின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
நாளை பிறக்கும் தமிழ் புத்தாண்டு அன்று, விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் விஷால் அவர் நடித்த ரத்னம் படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார். அதாவது விஜய் படத்தின் பிரமோ வெளியாகும் அதே வேளையில், தனது படத்தின் பிரமோவை விஷால் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு போட்டியாக அஜித்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிற நிலையில், விஷால் அவருக்கு ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்டு வருவதைப் பார்த்து ரசிகர்கள் இவர் நடித்த படங்களை ஓடாது. இப்படி அலும்பு பண்ணுகிறாரே என்று கிண்டல் செய்து வருகின்றனர்





