இயக்குனர் வெற்றிமாறன், இந்திய அளவில் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க நடிகர், நடிகையர் பலரும் விரும்புகின்றனர். ஏனெனில், நல்ல இயக்குனராக படைப்பாற்றல் மிக்க நல்ல படங்களை அவர் தொடர்ந்து தந்து வருகிறார். அவருக்கு என பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. சொற்ப எண்ணிக்கை என்றாலும், வெற்றிமாறன் படங்கள் வேற லெவலில் இருந்து வருகின்றன.
பொல்லாதவன் என்ற படத்தை, தனுஷை நாயகனாக வைத்து வெற்றி மாறன் இயக்கினார். அடுத்து ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன், விடுதலை ஆகிய படங்களை தந்த வெற்றிமாறன் இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தும், இன்னும் முடிவுக்கு வந்தபாடு இல்லை.
காமெடி நடிகர் சூரியை நாயனாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம்தான் விடுதலை. கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் நடிப்பில் தரமான சம்பவம் செய்து, இப்போது கதாநாயகன் நடிகராக மாறிவிட்டார் சூரி. இப்போது கருடன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்துள்ளார்.
ஆனால் இன்னும் விடுதலை 2 படத்தை முடிக்காமல் வெற்றிமாறன், தொடர்ந்து தாமதம் நீடித்து வருகிறது. அடிக்கடி திரைக்கதையில் மாற்றம் செய்வதும், பல நாட்கள் எடுத்த ஷூட்டிங் காட்சிகளை எடுத்து தூர எறிந்துவிட்டு, மீண்டும் புதிய ஸ்கிரிப்ட் எழுதி படத்தை இயக்குவது என தொடர்ந்து, விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் தாமதம் செய்து வருகிறார்.
இந்நிலையில், தென்காசியில் இப்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. இதுவரை எடுத்த விடுதலை 2 படத்தின் முழுக்காட்சிகளை போட்டுப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன், இதில் பல காட்சிகள் விசாரணை படம் போலவே இருக்கிறதே என்று குழம்பி போய்விட்டாராம். ஏனெனில் விசாரணை படமும் அவர் இயக்கியதுதான். அப்படியே அந்த படத்தின் சாயல் இதில் வந்துவிட்டது போலிருக்கிறது.
இதையடுத்து மீண்டும் 20 நாட்கள் படப்பிடிப்பை நீட்டித்த வெற்றிமாறன், இதுவரை எடுத்த காட்சிகளை நீக்கி விட்டு, மீண்டும் புதிதாக ஸ்கிரிப்ட் எழுதி, அதற்கேற்ப திரைக்கதையில் மாற்றம் செய்து மீண்டும் ஷூட்டிங் நடத்த உள்ளார். இப்படியே படப்பிடிப்பு நீண்டு கொண்டே போனால் என்ன செய்வது என படப்பிடிப்பு குழுவினர் நொந்து போய் உள்ளனர். இப்போது திருத்தி எடுக்கப்படும் படமாவது, விடுதலை 2 மாதிரி வருமா, அல்லது வடசென்னை போல வந்து விடுமா, என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





