- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிவகார்த்திகேயன் போடும் புதுக்கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா, எல்லாம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கையில்தான்...

நடிகர் சிவகார்த்திகேயன் போடும் புதுக்கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா, எல்லாம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கையில்தான் இருக்குது!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். அமரன் படம் வெளியான பிறகு, அவரும் வெற்றிப் பட ஹீரோக்களின் வரிசையில் இணைந்து விட்டார். அவர் அறிமுகமான மெரினா படத்தில் சம்பளம் ரூ. 10 ஆயிரமாக இருந்த நிலையில், இப்போது சுதா கொங்கரா இயக்கும் தனது 25 படத்துக்கு ரூ. 75 கோடி எஸ்கே சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

துவக்கத்தில் காதல் காமெடி கலந்த ஜாலியான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சிவகார்த்திகேயன். மெரினா எதிர்நீச்சல் மனம் கொத்தி பறவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா ரெமோ காக்கி சட்டை உள்ளிட்ட படங்களை ஜாலியான படங்களாக தந்தார்.

- Advertisement -

பிறகு வேலைக்காரன் நம்மவீட்டு பிள்ளை டாக்டர் மாவீரன் அயலான் அமரன் போன்ற படங்களில் அடுத்தடுத்த நகர்வுகளில் கதாநாயகனின் திறமை பேசும் படங்களாக, அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடித்தார் சிவகார்த்திகேயன். இதில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் பெரிய அளவில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் உயர்த்தி விட்டது.

கடந்த ஆண்டில் தீபாவளிக்கு வெளியான அமரன் படம், பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. உலகளவில் இந்த படம் ரூ. 325 கோடி ரூபாய் வசூலித்தது. கடந்தாண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த 2வது படம் அமரன்தான். முதலிடம் தி கோட், மூன்றாமிடம் வேட்டையன் படமும் பெற்றது.

- Advertisement -

இதற்கிடையே சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்தியில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் படத்தை முடிக்க உள்ளார் ஏஆர் முருகதாஸ். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில வாரங்களே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 75 கோடியாக உயர்த்திய சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸ் படம் வினியோகஸ்தர்கள் மத்தியில் என்ன விலைக்கு போகப் போகிறது என்பதை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார். அதிக விலை கிடைக்கும் பட்சத்தில் மேலும் தனது சம்பளத்தை சில கோடிகள் உயர்த்த அவர் திட்டமிட்டுள்ளதால், ஏஆர் முருகதாஸ் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பில் எஸ்கே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்