வடிவேலு தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட காமெடி நடிகர் என்பது அறிந்த அறிந்த ஒன்றே. அதே போல் சின்ன கலைவாணர் என்று புகழப்பட்ட விவேக்கும் சாதாரணமான ஆள் கிடையாது. எப்படி ரஜினி-கமல், விஜய்-அஜித் என்ற போட்டி இருக்கிறதோ ஒரு காலகட்டத்தில் வடிவேலு-விவேக் போட்டியும் இருந்தது. ஆனால் தொடக்க காலகட்டத்தில் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இருவரும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு தனிதனியே நடிக்க தொடங்கி ஒரு கட்டத்தில் இருவரும் போட்டி காமெடி நடிகர்களாக ஆகிப்போனார்கள்.

ஆனால் பல சின்ன சின்ன காமெடி நடிகர்களின் பேட்டிகளை பார்க்கும்போது வடிவேலு, விவேக் ஆகியோரின் குணங்களில் இருந்த வேறுபாடு குறித்து தெரிய வருகிறது. அதாவது வடிவேலு, தன்னுடன் இணைந்து நடிக்கும் சிறு சிறு காமெடி நடிகர்கள் அவரை விட நல்ல பெர்ஃபார்மன்ஸ் செய்தால் அந்த காட்சியை தூக்கிவிடுவாராம். சில சமயங்களில் அந்த நடிகரையே படத்தில் இருந்து தூக்கிவிடுவாராம்.
ஆனால் விவேக், பல சிறு சிறு காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்குவாராம். அவர்களின் பொருளாதார நிலையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வாராம். வடிவேலுவோ, விவேக்குடன் நடிக்கும் சிறு சிறு காமெடி நடிகர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மாட்டாராம். ஆனால் விவேக்கோ தாராள மனம் கொண்டவராக இருப்பாராம். சிறு சிறு காமெடி நடிகர்களும் வளர வேண்டும் என நினைப்பாராம்.

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் பேசியபோது, “பசுபதி கேர் ஆஃப் ராசக்காபாளையம் திரைப்படத்தில் நான் விவேக்குடன் நடித்துக்கொண்டிருந்தபோது இடைவேளை நேரத்தில் ஒருவர் வந்து ‘வடிவேலு உங்களை வேறு படத்திற்கு நடிக்க கூப்பிடுகிறார். இந்த படத்தில் நடிப்பதை நிறுத்துவிட்டு வரச்சொன்னார்’ என்று கூறினார். ஆனால் நானோ ‘இந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன்’ என கூறி அவரை அனுப்பிவிட்டேன். அதன் பிறகு வடிவேலு என்னை அழைக்கவே இல்லை. விவேக்கின் வளர்ச்சியில் மீதுள்ள பொறாமையில்தான் வடிவேலு அப்படி நடந்துகொண்டார்” என்று அப்பேட்டியில் கூறியுள்ளார்.





