- Advertisement -
Homeபொழுதுபோக்குஆக்ரோஷ நாயகனாக சூரி ரசிகர்களை மிரட்டிய கருடன் படம்; ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு -...

ஆக்ரோஷ நாயகனாக சூரி ரசிகர்களை மிரட்டிய கருடன் படம்; ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு – போடு வெடிய, சொக்கனை பார்க்க தயாராகும் ரசிகர்கள்!

- Advertisement -

காமெடி நடிகராக இருந்த சூரியை, கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் அவரை அழுத்தமான ஒரு நடிகராக வெளிப்படுத்தினார். முன்பு பல படங்களில் காமெடி நடிப்பில் சிரிக்க வைத்த சூரி, இந்த படத்தில் ஒரு துளியளவும் தனது காமெடி நடிப்பு வெளிப்படாத வகையில், அறிமுக நடிகர் போல மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

எனினும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் படங்களில் யார் நடித்தாலும், அவர்கள் வைரம் போல ஜொலித்து விடுவார்கள். ஏனெனில் அங்கு இயக்குனர்தான் ஜெயிக்கிறார். அதனால்தான் வெற்றிமாறன், பாலா, பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், கே பாலசந்தர், மணிரத்னம் போன்றவர்களின் படங்களில் நடிக்க கலைஞர்கள் போட்டியிடுகின்றனர்.

அதனால் விடுதலை படத்தில் சூரி நடிப்பில் அசத்தியிருந்தாலும், வெற்றிமாறன் படம் என்பதால், அவர்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஏனெனில் அந்த படத்தில் உண்மையில் ஹீரோவாக நின்று விளையாடியவர் நடிகர் விஜய் சேதுபதிதான். சூரியை கதாநாயகனாக நடிக்க வைத்த வெற்றிமாறன், அதற்கு ஒரு படி மேல் விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் விடுதலை படம் வெற்றிமாறன், விஜய் சேதுபதிக்கான படமாக அமைந்த நிலையில், 2வது முறையும் கதாநாயகனாக துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, கருடன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே, ரசிகர்கள் தன்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற மனநிலையில், சொக்கன் என்ற கேரக்டரில் இந்த படத்தில் சூரி நடித்திருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் சில காட்சிகளில் சூரியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. நடிப்பில், வசனங்களில் அவரது தனது முத்திரையை பதித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனால் இனி ஹீரோவாக தனது திரை பயணத்தை தொடர சூரி, திடமாக முடிவெடுத்துள்ளார். விடுதலை 2, கொட்டுக்காளி என அடுத்தடுத்த அவரது படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்நிலையில் கருடன் படம் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், இந்த படம் நாளை ( 3ம் தேதி) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில், சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் கருடன் படம் வெளியாகிறது. இதை படத்தின் வீடியோவுடன் சிம்ப்ளி சவுத் ஓடிடி நிறுவனம், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் கருடன் சொக்கனை ரசித்த ரசிகர்கள், மீண்டும் ஓடிடி தளத்தில் சூரியை காண ஆர்வமாக உள்ளனர். அதுவும் நாளை இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சற்று முன்