- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் ஆண்டனியா இது? ஆச்சரியப்பட்ட படக்குழு, எப்படி இருந்த அவர் இப்படி மாறிட்டாரே? -...

நடிகர் விஜய் ஆண்டனியா இது? ஆச்சரியப்பட்ட படக்குழு, எப்படி இருந்த அவர் இப்படி மாறிட்டாரே? – அட இப்படி ஒரு விஷயத்தை பண்ணப் போறாரா? சூப்பர் அப்பேட்டுங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. திருட்டுப்பயலே, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி நான் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பில் முத்திரை பதித்து வெற்றி பெற்றார்.

தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், அண்ணாதுரை, எமன், கோடியில் ஒருவன், ரோமியோ, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். குறிப்பாக பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன் ஆகிய 2 படங்களும் விஜய் ஆண்டனிக்கு மிக முக்கியமான வெற்றிப் படங்களாக அமைந்தன.

- Advertisement -

இதையடுத்து சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்தார். இந்த படமும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பிற இயக்குனர்களின் படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது மகள் மீரா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அவரை பெரிய அளவில் பாதித்தது.

எனினும் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்து தற்போது பழையபடி அவர் படங்களில் நடித்து வருகிறார். எனினும் முன்பெல்லாம் விஜய் ஆண்டனி பிற இயக்குனர்களின் படத்தில் நடிக்கும் போது கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங், பாடல்கள், இசை என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து தனது ஆர்வத்தை காட்டுவார்.

- Advertisement -

இது பெரிய தலைவலியாக இயக்குனருக்கு, தயாரிப்பாளருக்கு தலைவலியாக மாறிவிடும். ஆனால் தற்போது அவர் கமிட்டான படத்தில் நடிக்க மட்டுமே செய்கிறார். எந்த விஷயத்திலும் மூக்கை நுழைப்பதில்லை. அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய ஒரு படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். 95 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையிலும், எந்த தலையீடும் செய்யாமல் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தந்திருக்கிறார். அதுவும் இவரே தயாரிக்கும் படமாகவும் இது உள்ளது.

இதையடுத்து பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 படங்களை தொடர்ந்து பிச்சைக்காரன் 3 படத்தை இயக்கி, தயாரிக்கவும் அவரே ஹீரோவாகவும் நடிக்க விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார். மிக விரைவில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார். அவரது திரை பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்திய பிச்சைக்காரன் படத்தை சுந்தர் சி போல, அடுத்தடுத்து பல பாகங்களாக விஜய் ஆண்டனி இயக்கி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்