அஜித்குமார் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை மகிழ் திருமேனி இயக்க, திரிஷா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அதேபோல் குட் பேட் அக்லியில் முதல் கட்ட படப்பிடிப்பை அவர் முடித்திருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்குவது நம் அனைவருக்கும் தெரியும். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகிறது.
இந்த திரைப்படம் தொடங்கியதில் இருந்தே அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க வேண்டும் என்பதில் துடிப்பாக இருந்து வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். எதிர்பார்த்தது போலவே படத்திற்கான டைட்டில் ரிலீஸ், அடுத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பின்னர் செகண்ட் லுக் என அஜித் ரசிகர்களுக்கு அப்டேட்களை அள்ளி வீசி ஆனந்த படுத்தினார்.
மிகவும் கவர்ந்தது பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான். அப்படி ஒரு அஜித்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று, பலர் கமெண்ட் செய்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அதில் அஜித், கலர் கலரான சட்டை, உடல் முழுக்க டாட்டூ என வித்தியாசமான லுக்கில் காட்சி அளித்தார். இது திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, வரும் நாட்களில் தொடங்குகிறது.
அதன் பிறகு, தென்னாபிரிக்க நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு இருப்பதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். பிரேமலு திரைப்படத்தில் நடித்த நஸ்லென், குட் பேட் அக்லியின் நடிப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக, ஆதிக் ரவிச்சந்திரன் எஸ் ஜே சூர்யாவை அணுகியதாகவும் தெரிகிறது. ஆனால் முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மார்க் ஆண்டனி திரைப்படத்தின், எஸ் ஜே சூர்யா தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவரே படத்தில் நடிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





