- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியதாவது, 2024ம் ஆண்டில் எம்எஸ் சுப்புலட்சுமி மீதான என் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறப்பு போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு இருந்தேன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் தொடர்ந்து எம்எஸ் சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க எனக்கு 7 இடங்களில் இருந்து திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அனைத்தையும் நான் மறுத்து விட்டேன். அதற்கு காரணம் தேவையான முறையான அனுமதி பெறப்பட்டால் மட்டுமே இது போன்ற பயோபிக் படங்களில் நடிப்பது குறித்து என்னால் யோசிக்க முடியும். சட்டப்படி அனுமதி கிடைக்காத பட்சத்தில் அந்த படங்களில் நடிக்க முடியாது என்று நடிகை வித்யா பாலன் கூறியிருக்கிறார்.





