- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியதாவது, என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட பல காயங்கள் மற்றும் பல காரணங்களால் என் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பலர் என்னை ஒரு முன்மாதிரியாக பார்க்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் அப்பா உடல் தகுதியை என்னுடைய உடல் தகுதியுடன் ஒப்பிட்டு அவரே அப்படி இருக்கும் போது உங்களால் ஏன் இருக்க முடியாது என்று கேட்கின்றனர். எனவே என் உடல் அமைப்பை பேணிக் காக்க வேண்டியது அவசியம். இருப்பினும் திரை உலகில் என்னை விடவும் சிறந்த உடல் தகுதியுடன் இருப்பவர்கள் பலர் உள்ளனர் என்று சல்மான்கான் கூறியிருக்கிறார்.





