- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 தோல்விக்கு முக்கிய காரணமே இந்தியன் 3 தான் - ஷங்கர் இப்படி கோட்டை...

இந்தியன் 2 தோல்விக்கு முக்கிய காரணமே இந்தியன் 3 தான் – ஷங்கர் இப்படி கோட்டை விட்டதே அதனால்தான் – போட்டுத்தாக்கிய பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே அதற்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. ஏனென்றால் அவரது படங்கள் பிரமாண்டமாக இருக்கும். அதே நேரத்தில் வித்யாசமான கதைக்களத்தில் அவரது திரைக்கதை உருவாக்கம் இருக்கும். நல்ல சமுதாய கருத்துகளை தான் அவர் தனது படங்களின் வாயிலாக சொல்லி இருப்பார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்கள் ஷங்கரின் திறமையை சொல்லும் படங்களாக மட்டுமின்றி கதாநாயகனின் திறமையை வெளிப்படுத்தும் படமாகவும் இருக்கும். அதனால்தான் அர்ஜூன், விக்ரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் ஷங்கர் படங்களில் நடித்த போது தனித்து தெரிந்தார்கள். வழக்கமான மசாலா கதை நாயகன்களில் இருந்து மாறுபட்டனர்.

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன், 1996ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். கமல் நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையில், ஷங்கர் இயக்கத்தில் இந்த படம் மெகா ஹிட் படமாக இன்றும் பேசப்படுகிறது. இந்தியன் படத்தை காட்சிக்கு காட்சி ரசித்து பார்க்கும்படி இயக்கியிருந்தார் ஷங்கர். படத்தில் வந்த ஒவ்வொரு பாடலும், இன்றும் ஏஆர் ரகுமானின் பெயர் சொல்கின்றன. அதுபோல் சேனாபதி கேரக்டரில் கமல் நடிப்பு, தேசிய விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியன் 2, இது ஷங்கர் இயக்கிய படம் தானா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு, மிக மோசமான ஒரு படமாக பலத்த ஏமாற்றத்தை தந்தது. ஷங்கரை போன்ற ஒரு அனுபவசாலி டைரக்டர், இப்படிப்பட்ட படத்தை, கதையை எப்படி இயக்கினார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதே நேரத்தில் இந்தியன் 3 படமும் வெளிவர உள்ளதால், அந்த படத்தையும் இப்போதே ரசிகர்கள் விமர்சிக்க துவங்கி விட்டனர்.

இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, இந்தியன், சிவாஜி, முதல்வன், அந்நியன் போன்ற படங்களில் ஷங்கருடன் எழுத்தாளர் சுஜாதா இணைந்து பணியாற்றினார். கதை வசனங்களை எழுதியிருந்தார். இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு பணி செய்பவர். ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதி முழுமையான பிறகே, படப்பிடிப்பை துவங்குவார்.

அப்படி இந்தியன் 2 படத்துக்கான கதை, வசனங்களுடன் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்ற இயக்குனர் ஷங்கர் ஒரு கட்டத்தில் இந்தியன் 3 படப்பிடிப்பையும் தொடர்ந்து அதில் நடத்தியுள்ளார். அவர் முதலிலேயே இந்தியன் 2, இந்தியன் 3 கதை, திரைக்கதையை பிரித்து எழுதி இருந்தால் இப்படி இந்தியன் 2 தோல்வியை சந்தித்து இருக்காது. இரண்டையும் ஒரே நேரத்தில் ஒன்றாக இயக்கியதால்தான், இப்படி நேர்ந்து விட்டது. இந்தியன் 2 தோல்விக்கு காரணமே இந்தியன் 3 எடுக்கப்பட்டதுதான், என்று கூறியிருக்கிறார் சித்ரா லட்சுமணன்.

சற்று முன்