- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டோம்?, நொந்து போய் புலம்பிய நடிகை திரிஷா -...

அஜீத்குமார் படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டோம்?, நொந்து போய் புலம்பிய நடிகை திரிஷா – விடாமுயற்சியால் அப்செட் ஆன குந்தவை

- Advertisement -

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார் நடிகை திரிஷா. இப்போதும் சாமி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த மாமி போலவே இளமையாக, அழகாக இருக்கிறார். அதனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நடிப்பில் சிறுதொய்வு ஏற்பட்டு மார்க்கெட் இல்லாமல் இருந்தார் திரிஷா. 96 மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த பிறகு, திரிஷாவை பட வாய்ப்புகள் அதிகளவில் தேடிவர ஆரம்பித்து விட்டன. குந்தவை கேரக்டரில் பார்த்த அவரை, பலரும் இதயத்தில் குந்த வைத்து விட்டனர்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதைத்தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக, விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 4 மாதங்களாக அந்த படம் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த படத்தை அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் சிரஞ்சீவியுடனும், மலையாளத்தில் 2 படங்களும் என சில படங்களில் திரிஷா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் தக்லைப் படத்திலும் நடிக்க உள்ளார். இப்படி பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் திரிஷா.

- Advertisement -

இந்த சூழலில், கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் விடாமுயற்சி படப்பிடிப்பில், இதுவரை திரிஷா கொடுத்த கால்ஷீட் தேதிகளில் படப்பிடிப்பு சரிவர நடக்கவில்லை. இதனால் இன்னும் பெரும்பாலான காட்சிகளில் திரிஷா நடிக்க வேண்டியுள்ளது. அதனால் அடிக்கடி விடாமுயற்சி படத்தில் நடிக்க திரிஷாவுக்கான கால்ஷீட் தேதி மாறிக்கொண்டே இருக்கிறது.

இப்படி விடாமுயற்சி தேதிகள் மாற்றத்தால், திரிஷா கமிட் ஆன தெலுங்கு, மலையாளம் படங்களில் தேதியை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது. இதனால் பலரது சங்கடங்களுக்கு திரிஷா ஆளாகி வருகிறார். இப்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் வேளையில், இப்படி கால்ஷீட் சொதப்பும் விடாமுயற்சி படத்தில் ஏன் நடிக்க ஒத்துக்கொண்டோம் என, திரிஷா வாய்விட்டு புலம்பி இருக்கிறார், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மூடு அவுட் ஆகிறார்.

- Advertisement -

சற்று முன்