- Advertisement -
Homeபொழுதுபோக்குஉருட்டுல இது நேஷனல் லெவல் உருட்டா இருக்குதே... நடிகை ராஷ்மிகாவை கலாய்க்கும் ரசிகர்கள் - தனுஷ்...

உருட்டுல இது நேஷனல் லெவல் உருட்டா இருக்குதே… நடிகை ராஷ்மிகாவை கலாய்க்கும் ரசிகர்கள் – தனுஷ் குறித்து பேசி இப்படி வம்புல மாட்டிக்கிட்டாரே?

- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ் என்று சொல்லப்படுகிறார். இதற்கு காரணம் அம்மணி காட்டும் தாராள கவர்ச்சிதான் என்றால் அது மிகையல்ல. முதலில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ரெட்டியுடன் அவர் நடித்த படம் கீதா கோவிந்தம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா மீது ரசிகர்களின் பார்வை குவிந்தது.

கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தானாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படம், சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா. கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் ராஷ்மிகாவின் கவர்ச்சியான நடிப்பும், நடனங்களும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.

- Advertisement -

தொடர்ந்து தமிழில் வாரிசு, சுல்தான் ஆகிய இரண்டு படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்தார். ஆனால் இந்த 2 படங்களுமே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்த படங்கள் மட்டும் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருந்தால் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா இன்னும் தமிழில் பல படங்களில் நடித்திருப்பார்.

தமிழில் தனக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், இந்தி படவுலகம் பக்கம் சென்றார் ராஷ்மிகா மந்தனா. அங்கு கவர்ச்சியை மட்டுமே தாராளமாக காட்டி அவர் முன்வந்ததால் அனிமல் என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் ஜோடியாக நடித்தார். இதில் சில படுக்கையைறை காட்சிகளில் அவரது தாராளம், பாலிவுட் நாயகிகளையே கதி கலங்க வைத்துள்ளது.

- Advertisement -

இப்போது தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துவரும் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். தனுஷ் பிறந்த நாளுக்கு தனது இன்ஸ்டாகிராம் வாழ்த்துகளை தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, சொன்ன விஷயம்தான் இப்போது வைரலாகி வருகிறது.

அதாவது அந்த பதிவில் ராஷ்மிகா மந்தனா, இத்தனை நாட்கள் ஷூட்டிங் நடந்தும் தனுஷூடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு காரணம் ஷூட்டிங் நடந்த இடங்கள் எல்லாமே, போட்டோஜெனிக் இடங்களாக இருக்கவில்லை. அந்த வருத்தம் எனக்குண்டு. ஆனால் இந்த போஸ்டர் எனக்கு பிடித்திருப்பதால், அதை பகிர்ந்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறுகிறேன், என்று பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் இருக்கிறார். பிச்சைக்காரன் கெட்டப்பில் இருந்த தனுஷ் உடன் புகைப்படம் எடுக்கவில்லை என்று ஓப்பனாக சொல்லுங்களேன் என ரசிகர்கள் ராஷ்மிகாவை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்