கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், நயன்தாரா நடித்த படம் மூக்குத்தி அம்மன். ஆர்ஜே பாலாஜி நடித்த இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 ம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை தான், மாசாணி அம்மன் என்ற பெயரில் இரண்டாம் பாகமாக இயக்க திட்டமிட்டிருந்தார் நடிகர் ஆர்ஜே பாலாஜி. ஆனால் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டார். ஆனால் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை நானே தயாரித்து விடுகிறேன் என்றும், படத்தின் கதாநாயகி நயன்தாரா தான் என்றும் கூறிவிட்டார்.
அதனால் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நயன்தாராவும், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் படத்தில், திரிஷாவும் நடிப்பது உறுதியாகி விட்டது. தமிழ் சினிமாவை பொருத்த வரை பக்தி படங்களுக்கு அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதனால் நயன்தாரா, திரிஷா நடிக்கும் அம்மன் படங்களுக்கும் நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இந்த வரிசையில் மற்றொரு முக்கிய பிரபல நடிகையும் இணைகிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது பாகுபலி நாயகி தேவசேனையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை அனுஷ்கா தான் அம்மன் வேடத்தில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அந்த படத்தில் அவரும் அம்மன் கேரக்டரில் நடித்தால் ஒரே சமயத்தில் 3 பிரபல நாயகிகள் நடித்த 3 அம்மன் படங்கள் வரிசை கட்டி வந்து ரசிகர்களை பக்தி பரவசமடைய செய்ய இருக்கின்றன.
ஒருவேளை பிரபல நாயகிகள் நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா என மூன்ற பேர் நடிக்கும் அம்மன் படங்கள் மூன்றுமே பெரிய அளவில் வெற்றி பெற்றால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் அம்மன் படம் சீசன் களைகட்டி விடும். தியேட்டர்களில் வேப்பிலை கட்டி, ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்று சினிமா விமர்சகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





