- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் வெளியான 3 பாடல்களுமே சொதப்பல், நெகட்டிவ் விமர்சனங்களால் நொந்து போனாரா இசையமைப்பாளர்...

தி கோட் படத்தில் வெளியான 3 பாடல்களுமே சொதப்பல், நெகட்டிவ் விமர்சனங்களால் நொந்து போனாரா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா? இப்படி புலம்பி இருக்கிறாரே…

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர். இவரது இசைக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. பாடல்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி பல பாடல்களை பாடியும் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெளிநாடுகளில் இவரது இசைக் கச்சேரிகள் அடிக்கடி நடத்தப்படுகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று இவரது இசையை கொண்டாடி வருகின்றனர். ஆனால் யுவன் சங்கர் ராஜா அளவுக்கு அவரது அண்ணன் கார்த்திக் ராஜா இசையில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

- Advertisement -

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா, சென்னையில் தங்கியிருந்த வாடகை பங்களாவுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி தரவில்லை என்ற பிரச்னை கிளம்பி பெரிய அளவில் வைரலானது. இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்ட நிலையில், யுவன் சங்கர் ராஜா அந்த வீட்டு உரிமையாளர் மீது ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இதுவரை அந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியான நிலையில் எந்த பாடலுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை எடுபடுமா என்பதே ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா மீது விமர்சனங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

- Advertisement -

சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், இந்த விழாவில் தோல்வியில் இருந்து வெற்றி என்பது பற்றி பேச விரும்புகிறேன். ஆரம்பத்தில் நான் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் நான் இசையமைத்த படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை குத்தி விட்டனர். அப்போதெல்லாம் நான் கதவை மூடிக்கொண்டு, அறையில் தனிமையில் உட்கார்ந்து அழுதுக்கொண்டு இருப்பேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் நான் பேசுகிற வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும். நான் நடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டேன். எதையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த அனுமதிக்க கூடாது. அப்படி எல்லாம் இருந்ததால்தான், இன்று உங்கள் முன்னால் நான் நிற்கிறேன். எதிர்மறை விஷயங்களுக்கு என் காதுகள் மூடியே இருக்கும். நல்ல இசைக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும் என்று, அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்