தமிழ் சினிமாவில் மிக மூத்த நடிகைகளின் முக்கியமானவர் நயன்தாரா. ரஜினி விஜய் அஜித் என பல மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள இவர், வெற்றி படங்களை குவித்திருக்கிறார். நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் இரண்டாவது ரவுண்டு வந்த நயன்தாரா, அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். வாடகை தாயின் மூலம் இவர்கள் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அது தொடர்பான அனுமதி பெறவில்லை என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. திருமணமான பின்னரும், தொடர்ந்து நயன்தாரா படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டினாலும், நயன்தாராவுக்கு படத்தில் பெரிய ஸ்கோப் கொடுக்கப்படவில்லை. பிறகு அவர் தமிழில் நடித்த இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தன.
இதனிடையே, தனது திருமணம் மற்றும் அது தொடர்பான தருணங்களையும், விக்னேஷ் சிவன் உடன் காதலித்த பொழுதுகளையும் ஒன்றாக சேர்த்து அவர் நெட் பிளிக்ஸ் தளத்தில், தொடராக வெளியிட சம்மதித்தார் இதற்கு அவர் கணிசமான ஒரு தொகையை பெற்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அது வெளிவரவே இல்லை.
இப்படியான சூழலில் தான் திடீரென தனுசுக்கு எதிராக அறிக்கை விட்டு புயலை கிளப்பினார். அதில் நானும் ரவுடிதான் படத்திற்கான என்ஓசி சான்றிதழை தனுஷ் அளிக்கவில்லை என்றும், இதற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனுசை மிகவும் கடுமையான வார்த்தைகளால் நயன்தாரா சாடி இருந்தார்.
இதற்கு தனுஷ் பதில் ஏதும் கூறாத நிலையில் நயன்தாராவின் திருமண டாக்குமென்டரி வெளியாகி இருக்கிறது. அதில், பேசும் பலரும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம் என்று கூறியது தான். இப்படியான சூழலில் தற்போது அதை மீண்டும் அவர் பயன்படுத்தி வருவது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





