- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கே தெரியாமல் நான் அந்த அசிங்கமான தவறை செய்தேன், நான் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பும்...

எனக்கே தெரியாமல் நான் அந்த அசிங்கமான தவறை செய்தேன், நான் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பும் இருக்கிறது – மாஜி நாயகி ஸ்வர்ணமால்யா ஓபன் டாக்

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு அழகான நடிகையாக வலம் வந்தவர் ஸ்வர்ணமால்யா. சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை, கவனத்தை பெற்றவர். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் நடிகை ஷாலினிக்கு அக்கா கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து எங்கள் அண்ணா, யுகா, மொழி, பெரியார், அழகுநிலையம், புலிவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்தார்.

இவர் சிறந்த பரதநாட்டியக் கலைஞர். பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறார். அதே நேரத்தில் சாமியார் ஆஸ்ரமம் ஒன்றில் சாமியாருடன் இணைத்து அவர் பேசப்பட்டதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலான ஸ்வர்ணமால்யா கணவரையும் பிரிந்து விட்டார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஸ்வர்ணமால்யா கூறியதாவது, திருமணம் செய்துக்கொண்டு வெளிநாடு செல்லும் முடிவை நான் எடுக்கவில்லை. என் பெற்றோர்தான் எடுத்தனர். அவர்கள் நல்ல எண்ணத்தில்தான் அந்த முடிவை எடுத்தார்கள். சின்ன வயதில் என் திருமணத்தை முடித்தார்கள்.

என் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்கு சினிமா காரணம் இல்லை. அதை யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு சினிமாவில் வழிகாட்ட ஆலோசனை காட்ட சரியான ஆள் இல்லை. மணிரத்னம் போன்ற நல்ல இயக்குனர் படத்தில் நடித்ததால், அவர் போல மற்ற இயக்குனர்களும் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என தவறாக நினைத்து விட்டேன்.

ஒரு ஆபாச திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் நடித்து விட்டேன். அதில் 10 நிமிடங்கள்தான் நடித்தேன். அது ஒரு கெஸ்ட் ரோல்தான். அதுவும் ஒரு டப்பிங் படம்தான். அந்த படத்தின் ஒரிஜினல் சிடி என்னிடம் கொடுத்தார்கள். அந்த காட்சியில் நடிக்க நானே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறேன். அவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்திருக்கிறேன். அதே போல் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எனது திருமணம்தான் என்று ஸ்வர்ணமால்யா வௌிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்