- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழை படத்தில் அப்படி ஒரு காட்சியை வைக்க நினைத்தும் முடியவில்லை, வருத்தப்பட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்...

வாழை படத்தில் அப்படி ஒரு காட்சியை வைக்க நினைத்தும் முடியவில்லை, வருத்தப்பட்ட இயக்குனர் மாரி செல்வராஜ் – வாழை 2ம் பாகம் குறித்து அப்டேட் தந்துட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து இரண்டாவது அவர் இயக்கிய படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் நட்டி வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் நடித்த மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இந்த மூன்று படங்களுமே மாறி செல்வராஜுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாகவும் ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற படங்களாகவும் அமைந்தன.

- Advertisement -

சாதிய உரிமைகள், ஏற்றத் தாழ்வுகள், சமூக பாகுபாடுகள் குறித்து பேசப்படும் படங்களாக மாரி செல்வராஜ் இயக்கிய படங்கள் விமர்சனங்களில் சிக்கியது. எனினும் அவரது படத்தின் கதையும், கதைக்களமும், படத்தின் கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதனால் எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 4வதாக வெளியான படம் வாழை. இந்த படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பலத்த வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலமாக 25 கோடி ரூபாய்க்கு மேல் மாரி செல்வராஜ் லாபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வறுமையை காட்டி வருமானம் பார்த்துவிட்டார் இயக்குனர் என எழுத்தாளர் சாரு நிவேதிதா கடுமையாக விமர்ச்சித்தார். ஆனால் வாழை படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி மாரி செல்வராஜை புகழ்ந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் வாழை படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில், வாழை படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் நான் திரைத்துறையினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் அழைத்த எல்லோருமே வந்து வாழை படம் பார்த்தார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், பூங்கொடி டீச்சர் ஏன் வரவில்லை என பலரும் கேட்கிறார்கள். உண்மையில் அவரது கால்சீட் கிடைக்கவில்லை. படத்தின் இறுதியில் சிவனைந்தன் டீச்சரின் மடியில் படுத்திருப்பது போல் காட்சியை எடுக்க நினைத்திருந்தேன். அப்படி செய்திருந்தால் இப்போது பலரும் முன்வைக்கும் மோசமான குற்றச்சாட்டுக்கு அது பதிலாக இருந்திருக்கும். வாழை 2 பாகம் கண்டிப்பாக வரும். இதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கிறது. அது சிவனைந்தனை வைத்துதான் எடுப்பேன். என்னைப் பற்றி பலரும் புரிந்து கொள்வதற்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்