- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பா ரஞ்சித்துக்கு இயக்குனர் வெங்கட்பிரபு சொன்ன அட்வைஸ், அப்போ அந்த ரூட்டுல போங்கன்னு நாசூக்கா...

இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இயக்குனர் வெங்கட்பிரபு சொன்ன அட்வைஸ், அப்போ அந்த ரூட்டுல போங்கன்னு நாசூக்கா சொல்றாரோ…? – இவரு அதுக்கு சரிப்பட்டு வருவாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களை தான் தர விரும்புகின்றனர். முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் 4 பைட்டு, 4 பாட்டு என்பதுதான் அவர்களது கான்செப்ட் ஆக இருக்கிறது. ஹீரோயிசம் செய்து, பில்டப் காட்டும் ஹீரோக்களை மாஸ் ஆக காட்ட வைக்கும் படங்களை இயக்கி, பல நூறு கோடி ரூபாய்களை வசூலிப்பதே இவர்களது குறிக்கோள்.

இதில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் ஒருவர்தான். அவரது படங்களும் கமர்ஷியல் படங்களாக தான் இருக்கின்றன. காமெடி, கவர்ச்சி, காதல், அதிரடி, ஹீரோயிசம் கொண்ட படங்களை தான் அவரும் தந்து வருகிறார். அந்த வகையில் மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு, சரோஜா, கோவா படங்களை சொல்லலாம்.

வெங்கட்பிரபு இப்போது இயக்கி நாளை வெளிவர உள்ள தி கோட் படமும் கமர்ஷியல் ஹீரோ படம்தான். இந்த படத்தில் எந்தளவுக்கு மாஸ் காட்டி, ஹீரோயிசத்தை பில்டப் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இந்த படத்தை, விஜய் ரசிகர்களுக்கு பெருந்தீனியாக, கமகம பிரியாணியாக படைக்க வெங்கட்பிரபு படத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஆனால் இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்கள், கமர்ஷியலை தாண்டி தனக்கான ஒரு அடையாத்தை அவர் இயக்கும் படங்களில் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறார். அட்டக்கத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, மெட்ராஸ் என அவரது படங்கள், தலித் சமுதாய மக்கள் உரிமை பேசுகின்றன.

இதுபோன்ற சமுதாய கருத்துள்ள படங்களை இயக்கும்போது அதற்கான எதிர்ப்புகளும், விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. எனினும் அதையும் தாண்டி இதற்கான வரவேற்பும் கிடைத்து வருவதை மறுக்க முடியாது. அதுவே பா ரஞ்சித் அடையாளமாக இருக்கிறது. இப்போது வெளிவந்த அவரது தங்கலான் படமும் ரூ. 100 கோடி வசூலை கடந்த முக்கிய படமாக இருக்கிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு, பா ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். அவரது மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ரஞ்சித் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும். அவருக்குள் ஒரு கமர்ஷியல் இயக்குனர் இருக்கிறார். அவர் படங்கள் பேசும் அரசியல் எனக்கு புரியவில்லை. எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது.அவர் கமர்ஷியல் படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.

சற்று முன்