- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகை தமன்னா ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக அடிக்கடி பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். சில நேரங்களில் காலை உணவை அவர் தவிர்த்து விடுவதாகவும் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமன்னாவின் இந்த திடீர் ஆன்மீக பயணத்துக்கு பின்னால் கடும் விரதத்துக்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என்றும் அவர் ஏதேனும் முக்கியமான தகவலை அறிவிக்க போகிறாரா என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.





