நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். மேலும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்தார் இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஜெயம் ரவி பெயரை குறிப்பிடாமல், நடிகை குஷ்பு ஒரு பரபரப்பான பதிவை செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது, தனது குடும்பத்தை மேலாக போற்றுபவன் தான் உண்மையான உயர்ந்த மனிதன். அவனது தேவைகள் ஆசைகள் மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். திருமண வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும். தவறுகளும் நடக்கும்,.அதற்காக ஒரு மனிதன் தனது குடும்பத்தை விலக்கி வைக்கக் கூடாது.
ஒரு கட்டத்தில் இருவருக்குமான அன்பு குறையலாம். ஆனால் மரியாதை குறைய கூடாது. சுயநலமாக நாம் எடுக்க முடிவு பெரும்பாலும் பூமராங் போல திரும்பவும் நமக்கே வந்து சேர்ந்துவிடும். தன்னையும், தனது குழந்தைகளையும் கவனிக்கும் மனைவியை மதிப்பவனை உண்மையான ஆண். அவர்களை விட்டு செல்பவன் நல்ல மனிதன் அல்ல. இதனால் தனது குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாதவர் சுயநலவாதியே.
ஒரு தாயை குறிப்பாக உன்னை நேசித்து ஆதரித்த ஒருவரை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. இது இதயத்தை உடைக்கும் இரக்கமற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. ஒரு உண்மையான மனிதன் தன்னை உயர்த்துவதற்கு முதலில் தன் குடும்பத்தை உயர்த்த வேண்டும். உங்களுடன் இருப்பவர்களை மதிப்பதும் உங்கள் உலகத்தை உருவாக்கும் குடும்பத்தை போற்றுவதும் தான் உண்மையான பலம்.
இது காலத்தால் கூட உடைக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தும். மரியாதை என்பது அடிப்படையானது. அது உங்களின் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத நபர் அன்பின் பாதையில் இருந்தும், நிறைவான வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வார் என்று அந்த பதிவில் நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.
இந்த பதிவு யாருக்கானது என்று நடிகை குஷ்பு குறிப்பிடாத போதும், நடிகர் ஜெயம் ரவியை தான் அவர் இதில் குறிப்பிட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் ஜெயம் ரவிதான் சமீபத்தில் அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். ஆர்த்தியின் அம்மா, தயாரிப்பாளர் சுஜாதா குஷ்புவின் நெருக்கமான தோழிகளில் மிக முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தோழியின் சுஜாதாவின் மருமகன் ஜெயம் ரவியை தான் குஷ்பு இப்படி பதிவிட்டு விமர்சித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.





