- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இதைப்பத்தி யாருமே யோசிக்கலையே? விஜய் படங்களில் அந்த விஷயத்தை தொடர்ந்து குறிவைக்கும் ரஜினிகாந்த் -...

அட இதைப்பத்தி யாருமே யோசிக்கலையே? விஜய் படங்களில் அந்த விஷயத்தை தொடர்ந்து குறிவைக்கும் ரஜினிகாந்த் – அப்போ அடுத்த தரமான சம்பவம் அதுதானா?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் தந்த வெற்றியில் மகிழ்ச்சியில் இருக்கிறார். கடந்த 5ம் தேதி வெளியான தி கோட்படம் இதுவரை ரூ. 380 கோடிகளை கடந்து பெரிய அளவில் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அடுத்து நடிகர் விஜய் அவருடைய 69வது படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால் பிரகாஷ்ராஜ் நடிகைகள் மமிதா பைஜூ சிம்ரன், கதாநாயகியாக பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் அக்டோபரில் விஜய் 69 படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய் கட்சி சார்ந்த பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். அவரது கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் வருகிற 23ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த அரசியல் மாநாடு அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 73 வயதான நிலையிலும் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இன்னும் மூன்று படங்களில் நடிக்க மூன்று தயாரிப்பு நிறுவனங்களிடம் ரஜினி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் இயக்குனர்கள் யார் என்ற விவரம் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு முக்கிய தகவலாக நடிகர் விஜய் நடித்த வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர்களை குறிவைத்து அவர்களது இயக்கத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.

விஜய் நடிப்பில் கத்தி, சர்கார், துப்பாக்கி போன்ற வெற்றி படங்களை தந்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்பார் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து விஜய் நடித்த லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். அதே போல் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்தார். இப்போது தி கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் வெங்கட் பிரபு இளைஞர்களை வைத்து ஜாலியான பாடம் பண்ணும் ஒரு டைரக்டர் என்பதால் ரஜினிக்கும் வெங்கட் பிரபுவுக்கும் செட் ஆகுமா என்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

- Advertisement -

சற்று முன்