- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர், பிரபல நடிகர் வீட்டில் ரூ. 10 லட்சம் திருட்டு -...

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர், பிரபல நடிகர் வீட்டில் ரூ. 10 லட்சம் திருட்டு – வளைத்து பிடித்து கைது செய்த போலீசார், அட திருடிய நபர் அவரா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 50வது ஆண்டை நெருங்கிக் கொண்டு இருக்கிறார். அடுத்த ஆண்டு அவரது பொன்விழா ஆண்டை தமிழ் சினிமாவில் கொண்டாட இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தாணு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அவர் தனது படத்தில் நடிக்க அழைத்தால், உடனே ஓகே சொல்லும் அளவுக்கு ரஜினி மீது அன்பும், நட்பும், மரியாதையும் கொண்டிருக்கின்றனர். அவர்களது மாநிலத்துக்கு ரஜினி சென்றால், ரஜினியை அவர்கள் சந்திக்க வந்துவிடுகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் ராஜ்குமார், சிவராஜ்குமார் குடும்பத்தினர், தெலுங்கில் சிரஞ்சீவி, மோகன்பாபு, என்டிஆர் குடும்பம், இந்தியில் அமிதாப் பச்சன் என பல சீனியர் நடிகர்கள் ரஜினிக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர்.

தெலுங்கில் பிரபல நடிகர் மோகன்பாபு. இவர் தமிழிலும் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு விழாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தை விமான நிலையத்தில் வந்து வரவேற்று, அழைத்துச் சென்ற மோகன்பாபு அவருடனேயே நிகழ்ச்சி முழுவதும் காணப்பட்டார். ரஜினிக்கு மிகவும் நெருக்கமான, ஒருமையில் பேசிக்கொள்ளும் நண்பராக இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் மோகன்பாபுவுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார். அவர்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர். மோகன்பாபுவுக்கு ஐதராபாத்தில் ஜல்பள்ளியில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் இருந்து ரூ. 10 லட்சம் சமீபத்தில் காணாமல் போயிருக்கிறது.

இம்மாதம் 22ம் தேதி, மோகன்பாபு வீட்டுக்கு அவரது உதவியாளர் வந்திருக்கிறார். அப்போது அவர் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணத்தை அந்த வீட்டில் வேலை பார்த்த நபரே திருடிச் சென்றது தெரிய வந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி திருப்பதியில் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 7.36 லட்சம் பணத்தை மீட்டனர். இது தெலுங்கு படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்