- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷுடன் இணையும் பிரபல இளம் இயக்குனர்... எந்த ஊரில் படப்பிடிப்பு நடக்கப்போகுது தெரியுமா...

நடிகர் தனுஷுடன் இணையும் பிரபல இளம் இயக்குனர்… எந்த ஊரில் படப்பிடிப்பு நடக்கப்போகுது தெரியுமா…

- Advertisement -

தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கான முதல் போஸ்டரே, ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம், தனுஷின் கெட்டப் தான்.

அடர்ந்த தாடியுடன் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் அவர் இருந்தார். இதைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஆக இந்த படம் உருவாவதாகவும், இதில் தனுஷிற்கு கோடீஸ்வரர் கெட்டப்பும் உண்டு என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்கு நடுவே தனது இரண்டு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதில் ஒன்று அவரது ஐம்பதாவது திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் ராயன். இதில் தனுஷ் தான் இயக்குனரும் கூட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்திப் கிஷன், காளி ஜெயராம், அபர்ணா பால முரளி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தனுஷ் ஈடுபட்டு வருகிறார். இதே போல் தான் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வேலைகளிலும் தனுஷ் கிடைக்கும் நேரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்கிறார். அதன் பிறகு இளம் இயக்குனர் இளனுடன் தனுஷ் இணைவது உறுதியாக இருக்கிறது. இளன் ஏற்கனவே, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியிருந்தார். தற்போது கவின்னை வைத்து ஸ்டார் படத்தை அவர் எடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு முன்னதாக மீசை என்று தான் அவர் டைட்டில் வைத்தாராம். பிறகு சூப்பர் ஸ்டார் என்றும் டைட்டில் வைக்க பிறகு அதை மாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் தனுசுடன் இணைவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மதுரையை களமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாம். இருவரின் கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்