- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களின் மனம் கவர்ந்த மெட்டி ஒலி சீரியல் 2ம் பாகம் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு -...

மக்களின் மனம் கவர்ந்த மெட்டி ஒலி சீரியல் 2ம் பாகம் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு – ஆனால் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்தான்

- Advertisement -

சினிமாவுக்கு ரசிகர்கள் இருப்பதை போலவே, டிவி சீரியல்களையும் ரசிப்பதற்கும் பெருமளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு நாள் கூட தவற விடாமல் சீரியலை விரும்பி பார்க்கும் தீவிர ரசிகர் கூட்டமும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ் சீரியல் பார்ப்பதுதான்.

அந்த வகையில் பல சீரியல்கள், மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக சித்தி, மெட்டி ஒலி, நாதஸ்வரம், தெய்வமகள், அழகி, கோலங்கள், தென்றல், அண்ணாமலை, திருமதி செல்வம், தங்கம், வம்சம் என பல சீரியல்களை சொல்ல முடியும். இப்போது எதிர்நீச்சல், கயல் போன்ற சீரியல்களை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில், திருக்குமரன் இயக்கத்தில், சினிடைம்ஸ் சித்திக் தயாரிப்பில் வெளியான மெட்டி ஒலி சீரியல், மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 800 எபிசோடுகளுக்கு மேல் ஓடிய இந்த சீரியல், கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இந்த சீரியல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து பெண்பிள்ளைகளுக்கு தந்தையான டெல்லிக்குமார், தனது பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, திருமணத்துக்கு பிறகு பெண்கள் அவர்களது குடும்பத்தில் சந்திக்கும் பிரச்னைகள், உறவுகளுக்குள் ஏற்படும் பிணக்குகள் என, இந்த சீரியலை, மிகவும் யதார்த்தமாக அதுவும் நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பார் இயக்குநர் திருமுருகன்.

- Advertisement -

ஒவ்வொரு எபிசோடும், அடுத்து அடுத்து என்ன என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக விறுவிறுப்பாக இருந்தது. இது மீண்டும் இரண்டுமுறை டெலிகாஸ்ட் செய்யப்பட்டும், வரவேற்பை பெற்றதும் கவனிக்கத்தக்கது. இதில் நடித்திருந்த டெல்லிக்குமார், சேத்தன், போஸ் வெங்கட், வியட்நாடு வீடு சுந்தரம், சாந்தி வில்லிம்ஸ், காவேரி என பலரும் தங்களது இயல்பான நடிப்பால், சீரியலை வேற லெவலில் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மெட்டி ஒலி 2ம்பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த முறை இந்த சீரியலை டைரக்ட் செய்வது இயக்குநர் விக்ரமாதித்யன். மெட்டி ஒலி முதல் பாகத்தை இயக்கிய டைரக்டர் திருமுருகன் அல்ல என்ற தகவல், ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த முறையும் சினி டைம்ஸ் நிறுவனம்தான் மெட்டி ஒலி தொடரை தயாரிக்கிறது. திரு பிக்சர்ஸ் என்ற சொந்த தயாரிப்பில், டைரக்டர் திருமுருகன் வேறு சீரியல்களை இயக்கி வருவதால், இந்த தொடரை விக்ரமாதித்யன் இயக்குவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்