- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடிப்பில் உருவான குபேரா படம், எப்போ ரிலீஸ்ன்னு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு...

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான குபேரா படம், எப்போ ரிலீஸ்ன்னு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு – ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள், இயக்கும் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. தனுஷ், நித்யாமேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் நடித்த படம் ராயன். இது அவர் நடித்த 50வது படம். இந்த படம் 155 கோடி ரூபாய் என்ற அளவில் வசூலித்து அபார வெற்றியை பெற்று, பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஏனெனில் ராயன் படத்தில் நடிகர் தனுஷ் நடித்தது மட்டுமின்றி அவரே டைரக்ட் செய்து இருந்தார்.

- Advertisement -

ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் தனுஷ் டைரக்ட் செய்த 2வது படம் ராயன். இதையடுத்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் டிசம்பர் மாதம் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் தனது 4வது படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்துக்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் தேனி மாவட்டத்தில் முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

அதன் பிறகு தற்போது குபேரா படத்தின் விடுபட்ட சில காட்சிகளில் தனுஷ் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்க உள்ளது. குபேரா படத்தில் ராஸ்மிகா மந்தனா, தனுஷ் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கேரக்டரில் நடிகர் நாகார்ஜுனாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். குபேரா படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து தனுஷ் இந்தி படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஒரு பாடல் காட்சி இன்னும் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து தனுஷ் இட்லி கடை படத்தின் மீதி படத்தை முடித்துவிட்டு டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் 2 பாகங்களாக உருவாகிறது. அடுத்த ஆண்டில் இளையராஜா படம் படப்பிடிப்பை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படம், வருகிற பிப்ரவரி 27ம் தேதியன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி மகா சிவராத்திரி தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்