- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு, இந்த படத்தில் சூர்யா இப்படி ஒரு விஷயத்தை...

கங்குவா இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு, இந்த படத்தில் சூர்யா இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறாரா? – வேற லெவலா இருக்குதே, அசந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற நவம்பர் 14ம் தேதி சூர்யா நடித்த கங்குவா படம் வெளியாகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

கங்குவா படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் 3டி தொழில்நுட்ப முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 14ம் தேதி கங்குவா படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

கங்குவா படம் ரிலீஸூக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் படத்தின் பிரமோஷன் பணிகளை துவங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, படம் வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20ம் தேதி நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில், இந்த விழாவை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கங்குவா படம் குறித்து சில முக்கிய தகவல்களை அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி இருக்கிறார்.

- Advertisement -

அதில் கங்குவா படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று அவர் கூறி இருக்கிறார். கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவுக்கு பயங்கரமான டைட்டில் கார்டை ஒன்றை உருவாக்கி உள்ளார். சூர்யா இந்த படத்திற்காக 8 மொழிகளில் அவரே குரல் கொடுத்து டப்பிங் பேசியிருக்கிறார்.

தமிழ், ஆங்கில மொழிகள் மட்டுமே அவருக்கு தெரியும் என்ற நிலையில், மற்ற மொழிகளில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக அவர் இந்த 8 மொழிகளில் பேசியிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. வட இந்தியாவில் மட்டும் 3,500 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கங்குவா படம் வெளியாக உள்ளது என, படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்