- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரது பாணிக்கு மாறினாரா இயக்குனர் மணிரத்னம்? அட இதுவரைக்கும் அப்படி ஒரு பழக்கமே அவர்கிட்ட இல்லையே?...

அவரது பாணிக்கு மாறினாரா இயக்குனர் மணிரத்னம்? அட இதுவரைக்கும் அப்படி ஒரு பழக்கமே அவர்கிட்ட இல்லையே? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக மணிரத்னம் தனது படங்களை தந்து வருகிறார். தளபதி நாயகன் பம்பாய் ரோஜா மௌனராகம் கீதாஞ்சலி பொன்னியின் செல்வன் ராவணன் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் மணிரத்னம்.

எழுத்தாளர் கல்கி எழுதிய மிக பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக மணிரத்னம் படமாக இயக்கினார். ஆனால் பொன்னியின் செல்வன் 1 பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் 2ம் பாகம் படுதோல்வி அடைந்தது. எனினும் இந்த படத்தில் குந்தவையாக திரிஷா நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் படத்துக்கு 4 தேசிய விருதுகள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். நாயகன் படத்துக்கு பின் 38 ஆண்டுகளுக்குப் பிறகு தக்லைப் படத்தில் மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிலம்பரசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும் தக்லைப் படத்தில் திரிஷா, அபிராமி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் பெற சென்று விட்டார். அதேபோல் நடிகர் சிலம்பரசன் தனது 49வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். திரிஷாவும் அஜீத்குமாருடன் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஸ்பெயின் நாட்டில் முகாமிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது மணிரத்னம் தக்லைப் படத்தின் சிம்பு, திரிஷா ஆடும் ஒரு பாடல் காட்சி மற்றும் சில விடுபட்ட காட்சிகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் இந்த படப்பிடிப்பு ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் படங்கள் என்றாலே இதுபோன்ற பேட்ச் ஒர்க் எனப்படும் விடுபட்ட காட்சிகள் மீண்டும் எடுக்க வேண்டிய காட்சிகள் என்பதே அவரது இயக்கத்தில் இருந்ததில்லை.

குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட காட்சிகளை கச்சிதமாக அதை இயக்கி முடிப்பதுதான் மணிரத்னம் பாணி. ஆனால் இந்த முறை மணிரத்னம் அவரது ஸ்டைலில் இருந்து முற்றிலும் விலகி, தனது படத்தின் காட்சிகளை ரீசூட் செய்வதும், விடுபட்ட காட்சிகளை எடுப்பதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெற்றிமாறன் தான் இப்படி படத்தின் காட்சிகளை எடுத்துவிட்டு, அவற்றை தவிர்த்து விட்டு மீண்டும் புதிய காட்சிகளை எடுப்பது வழக்கம். இப்போது மணிரத்னமும் வெற்றிமாறன் பாணிக்கு மாறிவிட்டாரா என்று சினிமா ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்