தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய விஜய், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அதற்காக இப்போது நடித்து வரும் தனது 69வது படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்வதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.
நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசகேர், பின்னணி பாடகியாக பல பாடல்கள் பாடி இருக்கிறார். அவரது கணவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்களுக்கு தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர்தான். விஜய் ஆரம்பத்தில் நடித்த சில படங்களில் விஜயுடன் ஷோபா சந்திரசேகர் பாடியிருக்கிறார்.
ஆனால் விஜய் நடித்த படங்களில் ஷோபா சந்திரசேகர் அவருக்கு அம்மா கேரக்டரில் நடித்தது இல்லை. ஆனால் ஒரு ஜூவல்லரி விளம்பரத்தில் மட்டும் விஜய், ஷோபா சந்திரசகேர் இருவரும் அம்மா மகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய ஷோ சந்திரசேகர் இதுகுறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, விஜயக்கு அம்மாவாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயமாக நடித்திருப்பேன். விஜயிடம் கூட ஒருமுறை சொன்னேன். உனக்கு அம்மாவாக ஒரு படத்துல நடிக்கணும்ங்கற ஆசையாக இருக்குதுப்பா என்றேன். இதைக் கேட்டுட்டு விஜய் சிரிச்சுட்டார்.
அம்மா நீங்களும் நானும் பிரேம்ல ஒண்ணா நின்னா உங்களை பார்த்தா எனக்கு சிரிப்பு வந்துடும். அப்புறம்தாம்பா நாம நடிக்கறதை பத்தியே பேசணும். நீங்க வேணா ஒண்ணு பண்ணுங்க. நாம விளம்பர படத்துல நடிக்கலாம் அப்படீன்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தி அனுப்பிட்டார்.
விளம்பரத்துல வேணா நாம ரெண்டு நடிக்கலாம். ஆனா சினிமாவுல நீங்க அம்மாவா ஒரு கேரக்டரா என் முன்னாடி நின்னா எனக்கு ஒர்க் அவுட் ஆகுமுன்னு தோணலம்மா அப்படீன்னு விஜய் சொல்லிட்டார். ஆனால் நான் நம்பிக்கையோட விஜயுடன் நடிக்க காத்திட்டிருக்கேன் என்று விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் கூறியிருக்கிறார். ஆனால் பல ஆண்டுகளாக அவரது ஆசை நிறைவேறவில்லை. விஜய் அரசியலுக்கு செல்வதால் இனி அது நடக்கப் போவதும் இல்லை.





