- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு... அந்தப் படத்திற்கான ஐந்தாம் பாகத்தில் இறங்கிய சுந்தர் சி......

இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு… அந்தப் படத்திற்கான ஐந்தாம் பாகத்தில் இறங்கிய சுந்தர் சி… வாயடைத்துப் போன ரசிகர்கள்…

- Advertisement -

வெள்ளித்திரையில் கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் சக்கரவர்த்தியாக இருப்பவர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் இயக்குனராக மட்டுமே இருந்த சுந்தர் சி பிறகு தன்னை நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

 

- Advertisement -

அவரது நடிப்பில் முதன்முதலாக வெளிவந்த தலைநகரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு முழு நேர நடிகராகவே மாறிப்போன சுந்தர் சி அடுத்தடுத்த திரைப்படங்களை கொடுத்தார். ஆனால் அந்த படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்கிய சுந்தர் சி கலகலப்பு திரைப்படத்தை எடுத்து பலரையும் கலகலப்பு கூட்டினார். சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவையை மட்டும் கதைக்களமாகக் கொண்டு அந்த திரைப்படம் களம் இறக்கப்பட்டது என்றே கூறலாம்.

 

இந்த திரைப்படம் கொடுத்த வெற்றி சுந்தர் சி யை அடுத்தடுத்த படங்களுக்கு நகரச் செய்தது. இந்த சமயத்தில்தான் இயக்குனரின் பார்வை ஹாரர் படங்கள் பக்கம் திரும்பியது. அதையும் விட்டு வைக்காமல் களத்தில் இறங்கினார் சுந்தர் சி. ஒரு பேய், ஒரு பங்களா, வழக்கம்போல பேயை கிளைமாக்ஸில் அடக்குவது என ஜனரஞ்சகமான கதையை கையில் எடுத்து அவர் எடுத்த திரைப்படம் தான் அரண்மனை.

 

ஒரு திரைப்படத்திற்கு கதை முக்கியமல்ல, திரைக்கதையும் அது சொல்லப்படும் விதமும் தான் இங்கு பேசும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ள சுந்தர் சி, அரண்மனை படத்தை திரையரங்குகளில் அரங்கேற்றி அசத்தலான வெற்றியை ருசித்தார். பிறகு இது இரண்டாம் பாகமாகவும் மூன்றாம் பாகமாகவும் வளர்ந்தது. இதில் இரண்டாம் பாகம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுக்க மூன்றாம் பாகம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

 

இருப்பினும் இந்த ஆண்டு அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை அவர் எடுத்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார். யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. மீண்டும் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்த சுந்தர் சி தற்போது அரண்மனை படத்தில் ஐந்தாம் பாகத்தை எடுக்க உள்ளார். இதற்கான பிரி ப்ரொடக்‌ஷன் பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்