- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு, கோர்ட்டில் இன்று விசாரணை - சாதகமாக தீர்ப்பு...

கங்குவா படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு, கோர்ட்டில் இன்று விசாரணை – சாதகமாக தீர்ப்பு வருமா, குறித்த தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா – தவிப்பில் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த கங்குவா படம், வரும் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், கங்குவா படத்தை பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 99 கோடியே 22 லட்சம் ரூபாய் வாங்கிய நிலையில், இன்னும் 55 கோடி ரூபாய் திருப்பி தர வேண்டியுள்ளது. இன்னும் பணத்தை திருப்பி தராத காரணத்தால், கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

- Advertisement -

அத்துடன் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தது. ஏனெனில் தங்கலான் படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில், மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் 18 கோடி ரூபாயை தந்து விட்டதாகவும், அதனால் தங்கலான் படத்தின் ஓடிடியில் வெளியிடுவதற்கு ஆட்சேபனை எதுவும் இல்லை எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார்.

- Advertisement -

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தரவேண்டிய மீதி தொகையை நாளை (இன்று) வழங்கி விடுவோம் என்று கூறினார். இதையடுத்து நாளை (இன்று) வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இன்று மீண்டும் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இன்று மதியத்திற்குள் மீதி தொகை வழங்கப்பட்டு விட்டால், கங்குவா படம் வரும் 14ம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் வழக்கு விசாரணை மீண்டும் நடக்கலாம். அதனால் இன்றைய கோர்ட் விசாரணையில் சாதகமான தீர்ப்பு வருமா, குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா என்று சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையை இன்று தந்து விடுவதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நேற்றே உறுதி அளித்துள்ளதால், இந்த வழக்கு சுமூகமான தீர்வை எட்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்