வழக்கமாக தமிழ் சினிமாவில் 300 கோடி ரூபாய் 400 கோடி ரூபாய் என பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாக மாறி தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டத்தை தந்து விடுகின்றன. இந்தியன் 2 கேம் சேஞ்சர் தக்ஃலைப் விடாமுயற்சி கங்குவா குபேரா போன்ற படங்களை அந்த வரிசையில் சொல்லலாம். லியோ தி கோட் கூலி போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அவை தோல்வி படங்கள்தான்.
இந்த நிலையில் சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று பெரிய வெற்றியை தந்து வருகின்றன. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் நடிகைகள் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த பிளாஸ்ட் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
சுமார் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பிளாஸ்ட் படம் இதுவரை 40 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டது. மிக விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்குகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 350 தியேட்டர்களில் பிளாஸ்ட் படம் ஓடுகிறது. இந்த படத்தை பிரமோஷன் செய்ய படக்குழுவினர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தியேட்டர் விசிட் சென்றுள்ளனர்.
வார இறுதி நாட்களில் நல்ல வசூல் இருக்கும் என்பதால் அடுத்த வாரம் 50 கோடி ரூபாயை வசூலை பிளாஸ்ட் படம் கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் அர்ஜூனுக்கும் பல ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் கம்பேக் கிடைத்துள்ளது. இதில் நாயகியாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. கடைசியாக தமிழில் வரும் பெரிய பட்ஜெட் படங்கள் நல்ல வெற்றியை பெற்று வருகின்றன.
குறிப்பாக விக்ரம் பிரபு நடித்த சிறை ராதிகா சரத்குமார் நடித்த தாய்க்கிழவி இப்போது சூர்யா நடிப்பில் வெளிவந்த கருப்பு அதைத் தொடர்ந்து வெளியான பிளாஸ்ட் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது திரைக்கு வந்துள்ள பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ படமும் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடி வருகிறது. நிச்சயம் இந்த படமும் பெரிய வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறை தாய்கிழவி கருப்பு பிளாஸ்ட் பரிமளா அண்ட் கோ இந்த படங்களில் கருப்பு படம் மட்டுமே 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. மற்ற படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெறுவது தமிழ் சினிமா சக்சஸ் ஃபார்மூலாவுக்கு மாறிவிட்டது என்ற ஒரு சந்தோஷத்தை ரசிகர்களுக்கு தந்துள்ளது.





