- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்துக்கு வயது ஒரு தடையில்லை, எப்போதும் அதை செய்யலாம்; எனக்கும் அந்த ஆசை நிறையவே...

அந்த விஷயத்துக்கு வயது ஒரு தடையில்லை, எப்போதும் அதை செய்யலாம்; எனக்கும் அந்த ஆசை நிறையவே இருக்கிறது – ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா

- Advertisement -

நடிகை சமந்தா தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் பரபரப்பாக நடித்து வரும் நடிகை சமந்தா, சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சில பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார். நடிப்பு தொழில் என இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார்.

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவச் சிகிச்சைகள் பெற்று மருந்துகளை உட்கொண்டு வருகிறார். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோய் பாதிப்பில் இருந்து சமந்தா மீண்டு வருகிறார்.

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டில் நடிகர் நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. ஆனால் 4 ஆண்டுகளில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அவரை விட்டுப் பிரிந்து விவாகரத்து பெற்றார். இப்போது முரட்டு சிங்கிளாக தனிமையில் சமந்தா இருந்து வருகிறார்.

தமிழில் சமந்தா நடித்த தெறி, கத்தி, மெர்சல், 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், நீதானே என் பொன்வசந்தம், யு டர்ன், பானா காத்தாடி, ஈ உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சிட்டாடல் என்ற இந்தி வெப் தொடரில் சமந்தா அம்மாவாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த வெப் தொடரின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக நேர்காணல் ஒன்றில் நடிகை சமந்தா சமீபத்தில் பங்கேற்றார். அம்மா கேரக்டரில் நடித்தது குறித்து அந்த நேர்காணலில் சமந்தா கூறுகையில், எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு உள்ளது. இப்போது ஒன்றும் காலதாமதம் ஆகவில்லை. எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

தாயாக வாழ்வதும், இருப்பதும் அது ஒரு அழகான அனுபவம் அதை நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் பெரும்பாலான மக்கள் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வயது தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் தாயாகலாம், என்று நடிகை சமந்தா வெளிப்படையாக கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்