- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் சிம்பு நயன்தாரா மாதவன் வரிசையில்… அடுத்ததாக சிவகார்த்திகேயனுமா? என்ன கொடும சார் இது என...

அஜீத்குமார் சிம்பு நயன்தாரா மாதவன் வரிசையில்… அடுத்ததாக சிவகார்த்திகேயனுமா? என்ன கொடும சார் இது என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

இப்போதெல்லாம் சினிமாவில் உள்ள நட்சத்திர வீரர்கள் சிலர் அசையாத சொத்துகளை வாங்கிப் போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முன்பெல்லாம் நடிகர்கள் பெரும்பாலும் சம்பாதித்த பணத்தை சொந்த படம் தயாரித்து நஷ்டமடைவது வழக்கம். ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் வெகு உஷாராக இருந்து சம்பாதித்த பணத்தை எல்லாம் முதலீடாக மாற்றி விடுகின்றனர்.

அந்த வகையில் அசையாத சொத்துகளாக வீடுகள் மனைகள் ஓட்டல்கள் ரிசர்ட்டுகள் என பெரிய நகரங்களில் வாங்கி விடுகின்றனர். சினிமா தியேட்டர்கள் திருமண மண்டபங்கள் வணிக வளாகங்களையும் கட்டி விடுகின்றனர். பல ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கி போடுகின்றனர். இதெல்லாம் நிரந்தர சொத்துகளாக மாறி விடுகின்றன.

- Advertisement -

இப்போது லேட்டஸ்ட் ஆக சில நட்சத்திர நடிகர்கள் வெளிநாடுகளில் சொந்தமாக வீடுகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அங்கேயே குடும்பத்துடன் செட்டிலாகி விடும் நோக்கத்தில்தான் இவ்வாறு அரண்மனை போன்ற சொகுசு பங்களாக்களை அங்கு வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில் பல தமிழ் நடிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக நடிகர்கள் அஜீத்குமார் மாதவன் ஆகியோருக்கு துபாயில் சொந்தமாக வீடுகள் உள்ளன. அஜீத்குமாருக்கு 2 வீடுகள் உள்ளன. வீடுகள் என்றால் சொகுசு பங்களாக்கள் தான். 80 கோடி ரூபாய் முதல் 120 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வில்லாக்கள் தான். இப்போது அஜீத்குமார் இருக்கும் அதே பகுதியில் ரூ. 57 கோடி மதிப்பில் புதிய வில்லா ஒன்றை நடிகர் சிம்புவும் வாங்கியிருக்கிறா்.

- Advertisement -

நடிகை நயன்தாராவுக்கு சென்னை எக்மோரில் வீடு உள்ளது. அதே போல் போயஸ் கார்டனிலும் அவர் புதிய பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இதற்கிடையே துபாயிலும் நயன்தாரா வில்லாக்களை வாங்கி இருக்கிறார். எதிர்காலத்தில் நடிகை நயன்தாரா தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் துபாயில் செட்டில் ஆகி விட வாய்ப்புள்ளது.

இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் துபாயில் 2 வில்லாக்களை சொந்தமாக வாங்கியிருக்கிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. அவரும் இனி வரும் சில ஆண்டுகளில் துபாய்வாசியாக குடும்பத்துடன் மாறிவிடுவார் என்று கூறப்படுகிறது. திருச்சி சென்னையில் உள்ள அவரது வீடு சொத்துகளை எல்லாம் அவரது அக்கா பராமரிப்பில் விட்டுவிட்டு தனது குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் துபாயில் குடியேறி விடுவார் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்