- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் குறித்து இப்படி எல்லாம் பேசியிருக்கிறாரா காட்டுக்குள் இருந்த வீரப்பன் - ரஜினி பிறந்த நாளில்...

ரஜினிகாந்த் குறித்து இப்படி எல்லாம் பேசியிருக்கிறாரா காட்டுக்குள் இருந்த வீரப்பன் – ரஜினி பிறந்த நாளில் வைரலாகும் வீரப்பன் வீடியோ

- Advertisement -

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் நல்லவர்களும் இருக்கின்றனர். தீயவர்களும் அதே போல் மறக்கப்படாத மனிதர்களாக ஒருகட்டத்தில் மாறிப்போய்விடுகின்றனர். அப்படி அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்ட மனிதராக வாழ்ந்தவர் சந்தன மரக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்பட்ட வீரப்பன்.

தமிழக போலீசாரால் பல ஆண்டுகள் தேடப்பட்டு வந்த வீரப்பன் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப்பகுதிக்குள் பல ஆண்டு காலம் மறைந்து வாழ்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்போது அதிமுக தலைமையில், ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார்.

- Advertisement -

ஒருமுறை வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்று பணயக் கைதியாக வைத்துக்கொண்டது தமிழகம், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது வீரப்பன் குறித்து ரஜினி கடுமையாக விமர்சித்து பேசினார். வீரப்பன் ஒரு அசுரன். ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியது அப்போது வைரலானது.

அப்போது பாபா படம் வெளியான நேரம். தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு, தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் ரஜினி, ஒரு தமிழனை பற்றி இப்படி பேசுவது தவறு. உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்க ரஜினி அதை அலட்சியப்படுத்தினா். இதையடுத்து தியேட்டர்களுக்குள் புகுந்த பாமகவினர் ரஜினி நடித்த பாபா படப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு சென்றதெல்லாம் அப்போது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில், ஜி 5 ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ்சில் கூஸ் முனியசாமி வீரப்பன் என்ற பெயரில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ஆவணத் தொடராக வெளியாகிறது. நக்கீரன் சார்பில் இது ஆறு எபிசோடுகளாக வர உள்ளது. இதுகுறித்து டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று ரஜினி தனது 73வது பிறந்த நாளை இந்த நேரத்தில் ரஜினிகாந்த் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் வீரப்பன் பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் ரொம்பவே கஷ்டபட்டவர். அவர் மாதிரி இன்னொருவர் பிறப்பது கஷ்டம். ஆனால் ரஜினிகாந்த் எம்ஜிஆர் போலவே இருப்பார் என எனக்கு தோன்றுகிறது. அவர் எல்லோரையும் மதிக்க கூடியவர். தெய்வ பக்தி உள்ளவர். ரஜினி அவர்களே, நீங்கள் சொந்த கட்சி தான் துவங்க வேண்டும். தனியாக கட்சி ஆரம்பித்து, தனித்துதான் போட்டியிட வேண்டும். யாருக்கும் குடையாக இருந்துவிடக்கூடாது என அறிவுறுத்தியிருக்கிறார் வீரப்பன்.

- Advertisement -

சற்று முன்