யாரடி நீ மோகினி படத்தில் நடிகர் தனுஷூம் நடிகை நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து சிவகார்த்தியன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல என்ற குத்தாட்ட பாடலில் தனுஷ், நயன்தாரா இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தனர்.
அந்தளவுக்கு நெருங்கிய நட்பில் இருந்ததால், விஜய் சேதுபதி நயன்தாரா இணைந்து நடித்த, விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படத்தை நடிகர் தனுஷ் தயாரித்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் விக்கி, நயன் இடையே காதல் மலர்ந்ததால் படப்பிடிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் காதலில் தீவிரம் காட்டினர். இதனால் ஷூட்டிங் பலமுறை தடைபட்டு தயாரிப்பாளர் தனுஷூக்கு பலத்த நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டது.
அதில் நடிகர் தனுஷூக்கும், நயன்தாராவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புதான் இப்போது, நயன்தாரா மீது கோர்ட்டில் வழக்குப்போடும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. நயன்தாரா அவருடைய ஆவணப்படத்தில், தனுஷின் அனுமதியின்றி நானும் ரவுடிதான் ஷூட்டிங்கில் எடுத்த வீடியோ கிளிப்பிங்ஸை பயன்படுத்திய விவகாரம்தான் இப்போது விஸ்வரூபமாகி உள்ளது.
இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் தொடர்ந்த வழக்கில் கோர்ட், இந்த மனுவுக்கு பதில் பதிலளிக்குமாறு நயன்தாரா தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கு நயன்தாராவின் வழக்கறிஞர், ஆவணப்படத்தில் முறைகடாக எந்த காட்சியும் பயன்படுத்தவில்லை, விதிமீறல் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியிருந்தது நேற்று இணையத்தில் வைரலானது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே அவர்கள் இருவரும் இனி சேர்ந்து வாழ விரும்பவில்லை. என்று உறுதியாக கூறிவிட்டதால் அவர்களுக்கு கோர்ட் விவாகரத்து வழக்கு தீர்ப்பளித்தது.
இந்த சூழலில் நடிகை நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், பொய் சொல்லி ஒருவரது வாழ்க்கையை நீங்கள் அழிக்கும் போது அதை கடனாக எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த கடன் வட்டியுடன் உங்களுக்கு திரும்ப வரும். கர்மா ஒருபோதும் விடுவதில்லை என்று கூறியிருக்கிறார். இது தனுஷ் குறித்து நயன்தாரா சுட்டிக்காட்டிய பதிவுதான் என்பதால், இணையத்தில் வைரலாகி வருகிறது.





