- Advertisement -
Homeபொழுதுபோக்குபோலீஸ் ஸ்டேஷனுக்கு பாயாசம் கொடுத்து அனுப்பிய முதல்வர் எம்ஜிஆர் - யாருக்கு தெரியுமா? அந்த மனசுதான்...

போலீஸ் ஸ்டேஷனுக்கு பாயாசம் கொடுத்து அனுப்பிய முதல்வர் எம்ஜிஆர் – யாருக்கு தெரியுமா? அந்த மனசுதான் சார் கடவுள்!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வள்ளல் குணம் மிக்கவர் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்துவிட்டால் அவர் தன்னிடம் வந்து கேட்காமலேயே உதவும் குணம் மிக்கவர் எம்ஜிஆர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை துன்பங்களை சந்தித்து உயர்ந்த நிலைக்கு வந்தவர் புரட்சித் தலைவர்.

அதனால் வறுமையில் துன்பத்தில் வாடும் மக்களை கண்டுவிட்டால் தன்னை போல அவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர் உதவி செய்து விடுவார். அத்துடன் தன்னிடம் உதவி பெறுபவர் மற்றவரிடம் மீண்டும் போய் உதவி கேட்காத அளவுக்கு பெரிய அளவில் உதவும் குணமும் அவருக்கு உண்டு.

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. எம்ஜிஆர் வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட பாயசம் மிகவும் நன்றாக இருந்தது என்று அங்கிருந்த ஒருவரிடம் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அப்படி அவர் கூறிக் கொண்டிருந்ததை ஏதேச்சையாகக் கேட்டிருக்கிறார் எம்ஜிஆர்.

சில நாட்கள் கழித்து அதே போன்ற பாயசம் எம்ஜிஆர் வீட்டில் தயாரிக்கப்பட்டது. அப்போது உடனே எம்ஜிஆர் தனது உதவியாளரை அழைத்து கீழே இருக்கும் அந்தக் குறிப்பிட்ட காவல் துறை அதிகாரிக்கும் பாயாசம் கொண்டு போய் கொடுக்குமாறு சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

திரும்பி வந்த உதவியாளர், அந்தக் காவல் துறை அதிகாரி தற்போது நம் வீட்டில் பணியில் இல்லை, அவரது போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாற்றலாகி சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார். உடனே தனது உதவியாளரிடம், இந்தப் பாயாசத்தை அந்தக் காவல்துறை அதிகாரி இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்று கொடுத்து விட்டு வாருங்கள் என எம்ஜிஆர் கட்டளையிட்டிருக்கிறார்.

அதே போல் அந்த உதவியாளர். பாயாசத்தை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நேராக அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அந்த காவல் துறை அதிகாரியிடம் எம்ஜிஆர் கொடுத்து விட்டார் என்று கூறி தந்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த காவல் துறை அதிகாரி அப்படியே ஆடிப் போயிருக்கிறார். எம்ஜிஆருக்கு என்னைப் போன்ற சாதாரண ஒரு மனிதனிடம் கூட இத்தனை கரிசனமா என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்