- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய்க்கு எதிராக கம்பு சுத்துவதற்கு களத்தில் இறக்கப்படும் நடிகர் தனுஷ் - கடைசியில் என்ன...

முதல்வர் விஜய்க்கு எதிராக கம்பு சுத்துவதற்கு களத்தில் இறக்கப்படும் நடிகர் தனுஷ் – கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா? கலாய்த்து தள்ளிய பிரபலம்!

- Advertisement -

கடந்த சில தினங்களாக ஹாட் ஆஃப் டாபிக் ஆக இருப்பது நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்பதுதான். சமீபத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் அவர் பேசிய விதமும் அவரது ரசிகர்கள் நடந்துக்கொண்ட விதமும் விரைவில் அவர் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடிகர்கள் ராகவா லாரன்ஸ் விஷால் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறிய நிலையில் நடிகர் தனுஷூம் அரசியலுக்கு வருவது தமிழக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து பல தரப்பிலும் கடும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இதற்கு சில அரசியல் கட்சிகளும் பின்னால் இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, விஜய்க்கு இருக்கிற மாதிரி அஜீத்துக்கு இருக்கற மாதிரி ரஜினிக்கு இருக்கிற மாதிரி ஒரு பெரும் திரளான ரசிகர்கள் கூட்டம் தனுஷூக்கு இருக்கிறதா என்றால் என்னை பொருத்தவரை இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு ஊருக்கு 10 பேர் 20 பேர் அப்படீன்னு இருப்பாங்களே தவிர உதாரணமாக சென்னையில் அவர் ஒரு மாநாடு நடத்துகிறார் என்றால் சென்னையே குலுங்கற அளவுக்கு ஒரு கூட்டம் வருமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஊருக்கு 10 பேர் 4 பேர் என வெச்சுக்கிட்டு நீங்கள் தேர்தலில் நின்றால் அது எப்படி வெற்றியை தேடித் தரும்? அதுக்கு வாய்ப்பு இல்லை.

- Advertisement -

முதல்வர் விஜய்க்கு எதிராக கம்பு சுத்துவதற்கு நடிகர் தனுஷ்தான் சரியான ஆள் என்று திமுக தரப்பு அல்லது உதயநிதி ஸ்டாலின் நினைச்சிருந்தார் என்றால் அவரை வந்து எதிர்காலத்தில் யாருமே காப்பாத்த முடியாது. ஏனென்றால் அவருக்கு விஜய் பத்தியும் புரியலே. தனுஷ் பத்தியும் தெரியலே.

அதுதான் காரணமாக நான் நினைக்கிறேன். முதலில் நீங்கள் உங்கள் எதிரியின் பலத்தை புரிஞ்சுக்கணும். விஜயின் பலம் என்னவென்றே தெரியாமல் விஜய்க்கு எதிராக கத்தி வீச தனுஷை ரெடி பண்றீங்க என்றால் அது உண்மையில் காமெடியாக தான் இருக்கும் என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்