மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. மலர் டீச்சர் கேரக்டரில் நிவின் பாலியுடன் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து மாரி 2 என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த சாய் பல்லவி இப்போது அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. மானசிகாரே என்ற மலையாள படத்தில் நடித்த அவரை, தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக இயக்குனர் ஹரி அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, யாரடி நீ மோகினி, வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.
முன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து நடித்த நயன்தாரா, முன்னணி நடிகையாக மாறினார். பல வெற்றிப் படங்களுக்கு பிறகு நயன்தாரா கதையில் நாயகியை மையப்படுத்தி உருவான படங்களில் நடித்தார். டோரா, அறம், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நயன்தாரா நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த பிறகு, நயன்தாராவின் மார்க்கெட் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. அவர் கடைசியாக நடித்த 75வது படம் அன்னபூரணி பெரிய தோல்வியை சந்தித்தது. நெட்பிளிக்ஸ் வெளியான இந்த படத்தில் சில சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றதால், அதற்காக மன்னிப்பு கேட்கும் நிலை நயன்தாராவுக்கு ஏற்பட்டது.
ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா போடும் அதிரடி கண்டிசன், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் காட்டும் கெடுபிடி, பல கோடி ரூபாய் சம்பளம், வெளியூர்களில் படப்பிடிப்பு என்றால் நடிக்க மறுப்பது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி மட்டுமே நடிக்க ஒத்துழைப்பது, குழந்தைகளுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது என பலவிதங்களில் இயக்குனர்களை, தயாரிப்பார்களை வெறுப்படைய செய்கிறார்.
இந்த சூழலில் தற்போது அமரன் படம் தந்த அபார வெற்றியால் சாய்பல்லவி தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதீத கவனமும், பலத்த பாராட்டும் பெற்று வருகிறார். அவரது சம்பளமும் ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த முக்கிய படங்களில் அவர் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதனால் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம், மிக விரைவில் சாய்பல்லவிக்கு மாறிவிடும் வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.





