- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 29ம் தேதி ரிலீஸ் அறிவித்து தள்ளி வைக்கப்பட்ட மிஸ் யூ படம்; மீண்டும் ரிலீஸ்...

கடந்த 29ம் தேதி ரிலீஸ் அறிவித்து தள்ளி வைக்கப்பட்ட மிஸ் யூ படம்; மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு – இந்த முறை புயல் மழை எதுவும் வராம இருக்குமா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, உதயம் என் எச் 4, காதலில் சொதப்புவது எப்படி, அருவம், தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 2, சித்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

சித்தார்த் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறா விட்டாலும் நல்ல இளம் நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக இருக்கிறார். அதே நேரத்தில் சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி தனது கருத்துகளை வெளிப்படையாக பதிவிடுவார். அது சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த, சினிமா சார்ந்த விஷயங்களாக இருந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகின்றன.

- Advertisement -

நடிகர் சித்தார்த், கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்த மிஸ் யூ என்ற படம் கடந்த 29ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. இந்த படத்தில் கருணாகரன் பால சரவணன் லொள்ளுசபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

7 மைல்ஸ் பார் செகன்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்துளளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மிஸ் யூ படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. உலகம் முழுவதும் இந்த படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

- Advertisement -

இந்நிலையில் மிஸ் யூ படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி மிஸ் யூ படம் ரிலீஸ் செய்வதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் அரசு விடுத்த பெங்கால் புயல் எச்சரிக்கை காரணமாக இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்வதை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்தது.

அப்போது மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது மிஸ்யூ படத்தின் புதிய வெளியீடு தேதியை படக்குழு இன்று மாலை அறிவித்துள்ளது மிஸ் யூ திரைப்படம் வருகிற 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்