- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோவ விட்டு தள்ளுங்க... விஜய்யோட அடுத்த படத்துல லேட்டஸ்ட்டா யாரு நடிக்கிறாங்கன்னு தெரியுமா... முக்கிய நடிகருக்கு...

லியோவ விட்டு தள்ளுங்க… விஜய்யோட அடுத்த படத்துல லேட்டஸ்ட்டா யாரு நடிக்கிறாங்கன்னு தெரியுமா… முக்கிய நடிகருக்கு வெயிட்டான ரோலை கொடுத்த வெங்கட் பிரபு…

- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் நேற்று வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்த திரைப்படத்தை, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

லியோவில் முதல் பாதி சூப்பராக உள்ளது என்றும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதுவும் எல் சி யு சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், படத்திற்கான முதல் நாள் வசூல் பலரையும் புருவம் உயர்த்த செய்துள்ளது.

- Advertisement -

முதல் நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 115 கோடி ரூபாயை லியோ திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 27 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயதசமி விடுமுறை இருப்பதால் வரும் நாட்களிலும் லியோ வசூல் எதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் நடுவே தளபதி விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலையில் தீவிரம் காட்டி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கம் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜயின் தோற்றத்தை புதிய தொழில்நுட்பத்தில் காட்டுவதற்காக படக்குழு சமீபத்தில் கலிபோர்னியா சென்று வந்தது.

- Advertisement -

இந்த படத்தில் விஜய்க்கு தந்தை மகன் என இரண்டு கேரக்டர்களாம். தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்கிறார்கள். இதுபோக, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். முதலில் இதற்கான பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிய தகவலாக விஜய் வெங்கட் பிரபு படத்தின் எஸ் ஜே சூர்யா இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது திறமையான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் எஸ் ஜே சூர்யா. குறிப்பாக, ஸ்பைடர் மெர்சல் மாநாடு மார்க் ஆண்டனி திரைப்படங்களில் அவரது நடிப்பு பெரியதாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் விஜயுடன் சேர்ந்து நடிப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்