- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பான்னா பேர் இல்லே… பிராண்டு, புஷ்பா 2 டிக்கெட் முன்பதிவில் கெத்து காட்டி தூள் கிளப்பும்...

புஷ்பான்னா பேர் இல்லே… பிராண்டு, புஷ்பா 2 டிக்கெட் முன்பதிவில் கெத்து காட்டி தூள் கிளப்பும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் – இதுவரை இத்தனை கோடிகள் வசூலா?

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புஷ்பா தி ரைஸ் படம் வெளியானது. இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. செம்மர கடத்தல் பின்னணியை மையமாக கொண்டு புஷ்பா படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.

புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். வில்லனாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் பகத் பாசில், செம்மர கடத்தல் சிண்டிகேட் மெம்பராக சுனிலும் நடித்திருந்தனர். இந்த படம் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, புஷ்பா படத்தின் 2ம் பாகம் வருகிற 5-ம் தேதி வெளியாகிறது.

இந்த 2ம் பாகம் படத்தில் மைம் கோபி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். புஷ்பா படத்தில் நடிகை சமந்தா, ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதை போல, புஷ்பா 2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்துக்கு பின்னணி இசை சாம் சிஎஸ் அமைத்துள்ளார்.

புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் சமீபத்தில் தமிழ் தெலுங்கு இந்தி பெங்காலி மலையாளம் மொழிகளில் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த 2 வாரங்களாக நடிகர் அல்லு அர்ஜூன் நடிகை ராஸ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று, சென்னை, ஐதராபாத், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

புஷ்பா 2 படம் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில், புஷ்பா 2 ரிலீஸ் ஆகிறது. ஆனால் தெலுங்கானாவில் மட்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தியேட்டர்களில் நாளை ( 4ம் தேதி) புஷ்பா 2 படம் திரையிடப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக புஷ்பா 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ஜரூராக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை புஷ்பா 2 படம் டிக்கெட் முன்பதிவு 50 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் படம் வெளியாக ஒருநாள் உள்ள நிலையில் இன்னும் பல கோடிகள் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் டிக்கெட் முன்பதிவில் அதிக வசூல் செய்த படம் புஷ்பா 2 என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்