- Advertisement -
Homeபொழுதுபோக்குவணங்கான் பட ஷூட்டிங்கில் நடிகை மமிதா பைஜூவை நான் அடித்தேனா? - இயக்குனர் பாலா தந்த...

வணங்கான் பட ஷூட்டிங்கில் நடிகை மமிதா பைஜூவை நான் அடித்தேனா? – இயக்குனர் பாலா தந்த விளக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் டைரக்டர் பாலா. சேது நந்தா பிதாமகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை நான் கடவுள் ஆகிய படங்களை இயக்கியவர் பாலா. அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அந்த படங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது.

அதனால்தான் சில படங்களிலேயே அவர் பெரிய அளவில் ரசிகர்கள் மனங்களை கவர்ந்து அவர்கள் மத்தியில் பிரபலமானார். வரும் ஜனவரி 10ம் தேதி பாலா இயக்கத்தில் வணங்கான் படம் வெளியாக உள்ளது. இதில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 18ம் தேதி பாலாவுக்கு பாராட்டு விழா, வணங்கான் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவக்குமார் சூர்யா அருண் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வணங்கான் படப்பிடிப்பின் போது, மலையாள நடிகை மமிதா பைஜூவை பாலா அடித்தததாக சர்ச்சை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து இயக்குனர் பாலா கூறியதாவது, மமீதா பைஜூ என் மகள் மாதிரி. அவளை போய் எப்படி அடிப்பேன். இன்னொன்று பெண் பிள்ளையை யாராவது அப்படி அடிப்பார்களா, மும்பையில் இருந்து வந்த மேக்கப் ஆட்கள் இவருக்கு மேக்கப் போட்டு விட்டார்கள் எனக்கு மேக்கப் பிடிக்காது என்று அவர்களுக்கு தெரியாது.

- Advertisement -

மேக்கப் போடாதீர்கள் எனக்கு பிடிக்காது என்று மமீதா பைஜூவுக்கு சொல்லத் தெரியவில்லை. ஷாட் ரெடி என்றவுடன் மேக்கப் போடு வந்துவிட்டார். யார் மேக்கப் போட்டது என்று கையை ஓங்கினேன். உடனே அடித்துவிட்டார் என்று செய்தி பரவி விட்டது. உண்மையில் இதுதான் நடந்தது என்று கூறியிருக்கிறார் பாலா.

ஆனால் அதே நேரத்தில் வணங்கான் படத்தில் நடிக்க கமிட் ஆன மமிதா பைஜூ இந்த விவகாரம் பரவிய நேரத்தில், அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அப்போது அவரே அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னை பாலா அடித்துவிட்டார் என்றுதான் குற்றம் சாட்டியிருந்தார். அதனால்தான் அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் கூறியிருந்தார். அதுபற்றியும் பாலா விளக்கம் தந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்