- Advertisement -
நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை சிறுவயதில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவரை லண்டனில் படிக்க வைத்தார். ஒருமுறை நடிகர் சத்யராஜ் தியாகராஜனை பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த பிரசாந்த் சத்யராஜிடம் இருங்க அங்கிள் அப்பாவை கூப்பிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட சத்யராஜ் ஆச்சரியப்பட்டுள்ளார். தியாகராஜனுக்கு வளர்ந்த ஒரு அழகான மகன் இருக்கிறார் என்ற தகவலை சில இயக்குநர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதன்பிறகுதான் தியாகராஜனின் வீட்டுக்கு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தேடி வந்துள்ளனர். அப்படிதான் பிரசாந்துக்கு முதல் பட வாய்ப்பாக வைகாசி பொறந்தாச்சு படம் அமைந்தது. அதில் கதாநாயகனாக அறிமுகமாகி அவருக்குப் பெரிய அடையாளத்தையும் கொடுத்தது.





