- Advertisement -
Homeபொழுதுபோக்குசின்ன படங்களுக்கு தடையாக இருப்பதே பெரிய படங்கள்தான்; விடாமுயற்சி விலகியதால் ரிலீஸாகும் 9 படங்கள் -...

சின்ன படங்களுக்கு தடையாக இருப்பதே பெரிய படங்கள்தான்; விடாமுயற்சி விலகியதால் ரிலீஸாகும் 9 படங்கள் – இதில் ஏஆர் ரகுமானுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான படம் விடாமுயற்சி. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் திரிஷா அர்ஜூன் ரெஜினா கசாண்ட்ரா ஆரவ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு திடீர் அறிக்கை வெளியிட்ட லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்தது. அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் 2023ம் ஆண்டு ஜனவரியில் பொங்கலுக்கு ரிலீஸானது.

- Advertisement -

அதனால் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பொங்கல் பண்டிகை நேரத்தில் விடாமுயற்சி படம் வருவதை எதிர்பார்த்து ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் விடாமுயற்சி வர வாய்ப்புள்ளது.

விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்ற அறிவித்தவுடன் இப்போது ஏற்கனவே இருந்த பாலா இயக்கிய வணங்கான், ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களுடன் 7 புதிய படங்கள் பொங்கலுக்கு வர தயாராகி விட்டது. அதன்படி விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன் சத்யராஜ் மகன் சிபி நடித்த டென் ஹவர்ஸ் படம், ஜெயம் ரவி, நித்யாமேனன் நடித்த காதலிக்க நேரமில்லை, நடிகர் அதர்வா தம்பி நடித்த நேசிப்பாயா ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகை களத்தில் குதிக்க தயாராகி விட்டன. அத்துடன் தருணம், மெட்ராஸ்காரன் உள்ளிட்ட 7 படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

இதில் கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான். அந்த படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால், பின்னணி இசையை விரைவாக முடித்துத் தர வேண்டிய நெருக்கடிக்கு ஏஆர் ரகுமான் திடீரென ஆளாகி விட்டார். அதனால் இரவு பகல் பாராமல் பிஜிஎம் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஒரு பெரிய படம் வழிவிட்டால் எத்தனை சின்ன படங்கள் திரைக்கு வரும் என்பதை இந்த ஒரு சம்பவமே ரசிகர்களுக்கு உணர்த்தி விட்டது.

- Advertisement -

சற்று முன்