இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தனது மகன் விஜயை எப்படியாவது முன்னணி நடிகராக கொண்டு வர பாடுபட்டார். ஒரு தந்தையாக அவரது கடமைதான் அது. செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாகவும் நடிக்க வைத்தார். அதே நேரத்தில் விஜய் வளர்ந்த காலத்தில் மற்ற நடிகர்கள் போட்டியாக வந்துவிடக் கூடாது என அவர் சில சதி வேலைகளை செய்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, விஜய் வளர்ந்து வந்த காலகட்டத்தில் விஜய் மாதிரியே வேற ஒரு நடிகர் வளர்ந்து வந்தார் என்றால் அவர் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இயக்குனர் எஸ்ஏசி மிகவும் உறுதியாக இருந்தார். அதை தடுக்க அவர் எப்படி அணை கட்டுவார் என்பதை உதாரணத்துடன் நான் சொல்ல முடியும்.
ஒரு புதிய நடிகர் வருகிறார். அவரது முதல் படம் வெளிவந்து பெரிய ஹிட் ஆகிவிட்டது. மறுநாளே சம்பந்தப்பட்ட அந்த நடிகருக்கு எஸ்ஏசியின் மேனேஜரோ அல்லது பிஆர்ஓ போன் பண்ணி பேசுவாங்க. எஸ்ஏசி சார் உங்களை வெச்சு படம் பண்ண ஆசைப்படறாங்க. நேர்ல பேச ஆசைப்படறாங்க என்று கூப்பிடுவார்கள்.
இதில் சில நடிகர்கள் சிக்கி கொண்டால் அந்த படம் எப்படி வரும் என்பது உங்களுக்கே தெரியும். அந்த படம் கந்தலாகி வரும் போது புது நடிகர் மார்க்கெட் இழந்து பழைய இடத்துக்கே போயிடுவாங்க. இது மற்ற புது நடிகர்களை வளரவிடாமல் செய்த சதி என்று அப்போதே பேசினார்கள்.
எஸ்ஏசி வேண்டும் என்றே அப்படி எடுத்தாரா? அல்லது படமே அப்படி அமைந்து விட்டதா? அப்படீன்னு நமக்கு தெரியாது. ஆனால் அந்த சூழ்நிலை நிச்சயமாக அந்த நடிகரின் வளர்ச்சியை தடுக்கும். தன் மகன் விஜய் மீது நம்பிக்கை இருந்தாலும் கூட போர்க்களத்தில் இன்னொரு பலசாலி போட்டியாக வந்துடக்கூடாது என்று எஸ்ஏசி தெளிவாக இருந்ததாக அந்த காலத்தில் சொல்வார்கள்.
அதே போல் புதுமுக நடிகர் ஒருவர் நடித்த ஒரு படம் நன்றாக ஓடினால் சம்பந்தமே இல்லாத ஒரு 50 பேர் அந்த தியேட்டருக்குள் வந்து தேவையின்றி கூச்சல் போட்டு ஆரவாரம் செய்து கலாட்டா பண்ணி மற்றவர்களுக்கு இடையூறு செய்வார்கள். இதனால் படம் பார்க்கும் பெண்கள் முகம் சுளித்து வெளியறேி போவார்கள். தன் மகன் விஜயை ஒரு இடத்துக்கு கொண்டு வர இதுபோன்ற வேலைகளை எல்லாம் எஸ்ஏசி செய்தார் என்று அப்போதே சொல்லப்பட்டது என்று பத்திரிகையாளர் அந்தணன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





