- Advertisement -
Homeபொழுதுபோக்குகொடியை கொடுங்க கோட்டையை பிடிக்கிறோம், ரசிகர்கள் கூட்டத்தில் ஆவேசம் - விளக்கம் தந்த நடிகர் ரவிமோகன்!

கொடியை கொடுங்க கோட்டையை பிடிக்கிறோம், ரசிகர்கள் கூட்டத்தில் ஆவேசம் – விளக்கம் தந்த நடிகர் ரவிமோகன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. தற்போது அவர் ரவிமோகன் என்று அழைக்கப்படுகிறார். ஜெயம் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உனக்கும் எனக்கும் சந்தோஷ் சுப்பிரமணியம் பேராண்மை தனி ஒருவன் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் கொடுத்தவர்.

தற்போது ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் ரவி மோகன் இயக்கத்தில் இன் ஆர்டினரி மேன் என்ற புதிய படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும் நடிகர் ரவிமோகன் ஜீனி கராத்தே பாபு மிருதன் 2 ப்ரோ கிளப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தோல்வி படங்கள் தந்த ரவிமோகன், இனி மீண்டும் கம்பேக் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஒரு அரங்கத்தில் அகில இந்திய ரவிமோகன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. வரும் 10ம் தேதி ரவி மோகனின் 46வது பிறந்தநாள். இதை முன்னிட்டு அவர் ரசிகர்களை சந்தித்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது மேடையில் பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், அண்ணா அழைப்பிதழ் கொடுங்கள். தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம். கொடியை கொடுங்கள். உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம் என்று பேசினார்.

- Advertisement -

அதன் பிறகு மேடையில் பேசிய நடிகர் ரவி மோகன் கூறியதாவது, நடிகர்கள் ரசிகர்களை சந்தித்தாலே அரசியலுக்கு வருவதற்கா என்றுதான் கேட்கிறார்கள். ஆனால் அது ஒரு தனிப்பட்ட முடிவு. இப்போது நான் சினிமாவில் இருக்கிறேன். சினிமாவில் இருக்கும் வரையில் எந்த சார்பாகவும் நான் பேசவே முடியாது. அதுதான் யதார்த்தம். ஏனென்றால் என்னை பொறுத்தவரை சினிமா மட்டும் தான் ஜாதி மதம் பேதம் இல்லாமல் இருக்கும் ஒரு துறை.

தியேட்டர் உள்ளே கோயில் சர்ச் மசூதி மாதிரி எல்லா மக்களும் உணர்வால் ஒன்றிணைகிறார்கள். அதைத்தான் கோமாளி படத்தில் காட்டி இருப்போம். நல்லது செய்ய பதவி தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் நல்லது பண்ணலாம். பதவி இருந்தால் இன்னும் உதவி பண்ணலாம். ஆனால் அது இல்லாமலும் உதவி பண்ணலாம் என்று நடிகர் ரவி மோகன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்