- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நித்யாமேனன் நடவடிக்கை, கடுமையாக விமர்சித்த டைரக்டர் கிருத்திகா உதயநிதி - இப்படி...

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நித்யாமேனன் நடவடிக்கை, கடுமையாக விமர்சித்த டைரக்டர் கிருத்திகா உதயநிதி – இப்படி சொல்லிட்டாங்களே?

- Advertisement -

மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். பொதுவாகவே மலையாள நடிகைகளின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும். நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். அம்பிகா ராதா ரேவதி நதியா ஊர்வசி போன்ற சீனியர் நடிகைகள் எல்லாம் மலையாள வரவுதான்.

சமீபத்தில் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே போல் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

மாலினி 22 பாளையங்கோட்டை இருமுகன் ஓ காதல் கண்மணி 24 ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை தீனி அப்பாவின் மீசை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷூக்கு தோழியாகவும் இறுதியாக மனைவியாகும் ஒரு கேரக்டரில் நடித்து மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற தாய்கிழவி பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. மேலும் இந்த படத்துக்கு பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை படத்திலும் நித்யாமேனன் நடித்துள்ளார். அதே போல் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்து வரும் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நித்யாமேனன் நாயகியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் வரும் 14ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். நடிகை நித்யாமேனன் குறித்து கிருத்தி உதயநிதி கூறுகையில், நித்யா மேனன் பேய் போன்று நடிப்பவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது நடிப்பை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

நாம் நினைத்தது போல அவர் நடிக்கவில்லை என்றால் பிரச்னை அவரிடம் இல்லை, நம்மிடம்தான் உள்ளது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். 3 டேக்குகளுக்கு மேல் நடிக்க மாட்டார். அப்படி அவரிடம் ரீ டேக் கேட்டால், உங்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லுமாறு கேட்பார். நாம் கேட்பது போல் நடித்துக்கொடுப்பார், என்று கிருத்திகா உதயநிதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்