நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படத்தில் அப்பா மகன் என்ற 2 வேடங்களில் கமல் நடித்திருந்தார். இதில் இந்தியன் தாத்தா கேரக்டரில் நடித்த கமலுக்கு 3வது முறையாக மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.
ஏஆர் ரகுமான் இசையில் இந்தியன் படத்தின் அனைத்து பாடல்களும் இன்றும் கொண்டாடப்படுகின்றன. சுகன்யா மனிஷா கொய்ராலா ஊர்மிளா கவுண்டமணி செந்தில் நிழல்கள் ரவி அஜய் ரத்னம் நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழ் சினிமா கொண்டாடும் கிளாசிக்கல் படமாகும்.
இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக கமல் நடிப்பில் ஷங்கர் மீண்டும் இயக்கிய படம் இந்தியன் 2. கடந்தாண்டில் வெளியான இந்த படம் ஷங்கர் இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வேறுபட்டு மிக மிக மோசமான ஒரு படமாக விமர்சனத்தில் சிக்கியது. ஷங்கர்தான் இந்த படத்தின் இயக்குனரா என்று ரசிகர்கள் சந்தேகப்படும் அளவுக்கு இந்த படம் மோசமாக இருந்தது.
இந்நிலையில் ஷங்கர் தெலுங்கில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வந்தார். அப்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் பேசிய தெலுங்கு படவுலக நணபர்கள், சக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம், இந்தியன் 2 படம் தயாரிப்பால் லைகா தயாரிப்பு நிறுவனம் பலத்த நஷ்மடைந்தது. அதுபோலவே உங்களையும் ஷங்கர் காலி செய்துவிடுவார் என்று கூறி அவரை அப்செட் ஆக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இயக்குனர் ஷங்கர், தில் ராஜூவை நேரில் அழைத்து கேம் சேஞ்சர் படத்தின் சில முக்கியமான காட்சிகளை அவருகு்கு ஸ்பெஷலாக போட்டு காட்டியுள்ளார். குறிப்பாக அஞ்சலி நடித்த சில காட்சிகளை பார்த்த தில் ராஜூவுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகுதான் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துக்கொண்டு பேசி வருகிறார். இந்த தகவலை தில்ராஜூவே செய்தியாளர்களிடம் கூறியும் இருக்கிறார்.
இந்தியன் 3 படத்தை எடுத்த வரைக்கும் போட்டு காட்டுங்கள் என்று லைகா புரடக்சன்ஸ் கேட்ட போது மறுத்த இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளருக்கு அவர் கேட்காமலேயே நேரில் அழைத்து படத்தை போட்டு காட்டியிருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் கறார் காட்டிய ஷங்கர், தெலுங்கு தயாரிப்பாளரிடம் மட்டும் இப்படி தாராளம் காட்டலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





