நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் நடந்துவரும் கார் பந்தயங்களில் விறுவிறுப்பாக கலந்துக்கொண்டுள்ளார். 2 தினங்களுக்கு முன் கார் பந்தய பயிற்சியின் போது அஜீத்குமார் ஓட்டிய கார், திடீரென விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அஜீத்குமார் தப்பினார். எனினும் இது ஏகே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜீத்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் வருகிற 23ம் தேதி அல்லது 30ம் தேதி வெளியாகும் என்ற தகவல் உள்ளது. ஆனால் படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் சென்சார் செய்யப்பட்டு, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 30 நிமிடம் 56 வினாடிகள் படத்தின் நீளமாக உள்ளது.
மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2025ம் ஆண்டில் விடாமுயற்சி குட்பேட் அக்லி என்ற 2 படங்கள் வெளியாக உள்ளன. அதே நேரத்தில் வருகிற அக்டோபர் மாதம் வரை அஜீத்குமார், கார் பந்தய போட்டிகளில் பிஸியாக இருப்பதால் அடுத்து அவரது படம் 2026ம் ஆண்டில்தான் வெளியாக உள்ளது. அவரது அடுத்த படத்தை சிறுத்தை சிவா, வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ் என 3 பேரில் ஒருவர் இயக்க அதிக வாய்ப்புள்ளது.
நடிகர் கமல்ஹாசன், இப்போது முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர்களுக்கு சீனியர் நடிகராக இருப்பவர். நடிகர் ரஜினிகாந்தே, நடிப்பில் கமல் எனக்கு சீனியர், நான் அவருக்கு ஜூனியர் என்று சில மேடைகளில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த வகையில் அஜீத்குமார் சீனியர் நடிகர் கமல்ஹாசன் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார்.
அஜீத்குமார் பல ஆண்டுகளாக பேட்டி தருவதில்லை. பில்லா படம் வெளியான போது அவர் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளார். அப்போது அஜீத்குமார் நேர்காணலில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, அங்கிருந்த ரசிகை ஒருவர் கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது முகம் மாறிய அஜீத்குமார், கமல்ஹாசன் சார் அல்லது மிஸ்டர் கமல்ஹாசன் என்று சொல்லுங்கள் என்று அந்த ரசிகையின் தவறை திருத்தியுள்ளார். அந்த பழைய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.





